பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 தாவரம்-வாழ்வும் வரலாறும் இனி, பிற மகரந்தச் சேர்க்கைக்குப் பூக்களில் அமைந்துள்ள பொறி முறைகளையும் (mechanisms) காண்போம். Gob huGH r so GLIT 5 (ps ogo (Lever mechanism): இம்முறை சால்வியா (salvia) பூவில் அமைந்துள்ளது. பூவின் புல்லி வட்டம் இரு உதடுகளாகப் பிரிந்து இருக்கும். கீழ் உதடு பூச்சிகள் வந்து தங்குவதற்கு இடமாகிறது. மேலுதடு இப் பூவில் உள்ள இரு தாதிழைகளேயும் வளேந்த சூல் தண்டையும் மூடி இருக்கும் உறை போன்றது. தாதிழைகள் மிகவும் குட்டை யானவை. தாதுப் பைகளே இனேக்கும் இணேப்பி (connective) மிகவும் நீண்டு வளேந்து எங்கும் திரும்பும்படி தாதிழையில் பொருந்தி இருக்கும். இணைப்பியின் நீண்ட பாகத்தில் ஒரு பாதி மகரந்தப் பையும், குட்டையான பாகத்தில் மற்ருெரு பாதி மகரந் தப் பையும் உள்ளன. இப் பாதி மகரந்தப் பை மலடானது. இவ் வமைப்பு நெம்புகோலே ஒத்துள்ளது. இணேப்பி நெம்புகோலேயும் தாதிழை முனேயாணி சுழலகத்தையும் (fulcrum) ஒக்கும். இப் பூவின் தேனே உண்ணவரும் பூச்சிகள் தமது நீண்ட துதிக்கை போன்ற உறிஞ்சு குழாயினே சூலகத்தின் அடியில் சுரக்கும் தேனேத் தேடி உள்ளே விடும். அது இணேப்பாகிய நெம்புகோலின் குட்டையான பாகத்தை மோதுகிறது. இதனுல் நீண்ட பாகம் கீழே தாழ்ந்து, பூச்சியின் முதுகில் படும். தாது, பூச்சியின்மேல் சிந்தும். இப் பூவில் ஆன கம் முன் முதிரும். ஆதலால் பூச்சி, வேறு பூவில் சென்று, தனது உடம்பில் பூசப்பட்டுள்ள மகரந் தத்தை அப் பூவின் சூல்முடியில் படும்படி அமர்ந்து தேன் எடுக்கும். இவ்வாறு நெம்புகோலேப்போல இணேப்பி அசை வதால் இம் முறை இப் பெயர் பெற்றது. இதல்ை பிற மகரந்தச் சேர்க்கை நிகழ முடியும் lossol sor Glim poopoop (Piston mechanism): இதனே ஞாழல் எனப்படும் புலிநகக் கொன்றைப் பூவில் (crotalaria laburm folia) * Tooorovirú. @ιΊ μ },6y?65r (3 logìl , p3, £Jgij அகன்ற கொடியல்லி (standard) யும் இரு பக்கங்களில் சிறகிதழ் களும் (wing), அடியில் இரு படகிதழ்களும் (keel) உள்ளன. படகிதழ்கள் இரண்டும் அடியிலிருந்து நுனிவரை இருபுறத்திலும் ஒட்டியிருக்கும். இவற்றுள்ளே தாதிழைகள் பத்தும், நீண்ட சூல் தண்டும் மூடி இருக்கும். இப் பூவில் ஆன கம் முன்முதிரும். சூல் தண்டின் நுனி சூல்முடிக்கடியில் மயிர்த்துாவிகளேப் பெற்றுள்ளது. கொடியல்லியின் நிறத்தால் தன்வயமான பூச்சி சிறகிதழ்களில் வந்து அமரும்; அமர்ந்து மலர் கிழியத் தேனைத் தேடும். அப் பொழுது படகிதழ்களின் மேற்புறத்தில் அமருமானுல், பூச்சியின்