பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்க்கை : 1329 நிறையில்ை அவை அமுங்கி, அவற்றின் நுனியிலுள்ள துளே வழி யாகச் சூல் தண்டு வெளிவரும். வரும்போது அங்குள்ள மகரந் தத்தை தூவிகளின் மூலம் வெளியில் தள்ளும். இந்த மகரந்தம் பூச்சியின் உடம்பில் ஒட்டிக்கொள்ளும். பூச்சி நகர்ந்தவுடன் சூல் தண்டு படகிதழ் உறைக்குள் திரும்பிவிடும். இவற்றுடன் வேறு பூவிற்குச் செல்லும் பூச்சி அப் பூவில் அமரும்போது அதன் கனத்தால் வெளிப்படும் சூல்முடி பிற மகரந்தத்தைப் பெறுகின் றது. சூல் தண்டு இப் பூவில் பிஸ்டன்போல மேலும் கீழுமாக (வெளியும் உள்ளுமாக) நகர்வதால் இதைப் பிஸ்டன் பொறிமுறை என்பர். சிறைப் பொறிமுறை (Trapping Mechanism) இம் முறை ஆடுதின்னப் பாளேயில் உள்ளது. இதன் பூவுறை (perianth) இணேந்து நீண்டு குழாய்போல இருக்கும். பூவின் அடியில் சூலகமும் அதன் மேல் (சூல் தண்டில்லாத) சூல்முடியும், சூலகத்தைச் சுற்றி வட்டமாகத் தாதுப் பைகள் ஒட்டிக்கொண்டும் இருக்கும். பூவுறைக்கும் சூலக அடிக்கும் இடையில் சுற்றிலும் தேன் சுரக்கும். பூவுறையின் மேற்புறத்தில் சிறு துளே ஒன்றுண்டு. அதற்குமேல் பூவுறை ஓர் இதழாக அகன்று நீண்டு பல நிறம் பெற்றுத் தோன்றும். துளேயின் விளிம்பிலும், பூவுறைக் குழாயுள்ளும் உட்புறமாக மடிந்துள்ள சிறு மயிர்த்துாவிகள் அடர்ந் திருக்கும். பூவின் நிறத்தாலும், மனத்தாலும், தேலுைம் இழுக் கப்பட்டு வரும் சிறு பூச்சிகள் நூற்றுக்கணக்காகப் பூவுறைத் துளே வழியே உட்செல்லுகின்றன. மயிர்த்துாவிகள் உட்புறம் மடிந் திருப்பதால் பூச்சிகள் வெளியில் திரும்ப இயலாது உள்ளே நடமாடித் திரிந்து தேன் நாடி உலவும். அங்குச் சுரந்துள்ள தேனைப் பருகிப் பூவுறைக்குள் சுற்றிச் சுழலும் பூச்சிகள் தாதுப் பைகளைச் சிதைத்து மகரந்தத்தை உண்டும், அவற்றை மெய்பட விதிர்த்தும் வெளிவர முடியாமல் உள்ளே அடைபட்டு இருக்கும். அத்தைத் தின்று அங்கே கிடக்கும். அப் பூச்சிகள் ஒன்றிரண்டு நாட்களுக்குப் பின்னர், மயிர்த்துாவி வாடிப்போய்ப் பூவுறையுடன் ஒட்டிக்கொள்வதால் வெளிப்படும். வெளிவந்த பூச்சிகள் திரும் பவும் தம்மேல் உள்ள மகரந்தத்துடன் வேறு பூவினுள் நுழையும். இப் பூக்களில் பெண்ணகம் முன்முதிரும். ஆதலால், மகரந்தம் சூல்முடியில் பட்டதும் ஒட்டிக்கொண்டு வளரும். இங்ங்னமாக இப் பூவில் பூச்சிகள் சிறைப்படுவதால் இதைச் சிறைப் பொறி முறை என்று கூறுவர். தா-9