பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தாவரம்-வாழ்வும் வரலாறும் மகரந்தச் சேர்க்கை தாவரங்களில் பலவாறக உள்ளது. எனினும், மிகவும் வியக்கத்தக்க முறையில் தாவர வாழ்வும் பூச்சி களின் வாழ்வும் ஒன்றி இருக்கும்படியான ஒன்றிரண்டு உதாரணங் களேக் காண்போம். வெங்காயக் குடும்பத்தைச் (liliaceae) சேர்ந்த யூகா (yucca) மரம், சிறு பாக்கு மரம் போன்றது ; கற்றழை போன்ற இலேகளே உடையது; பல நாளேக்கு ஒருதரம் பூக்கும் இயல்புடையது. பூக்கள் சிவப்பு நிறமானவை. இப் பூக்களின் மகரந்தச் சேர்க்கை புரொனுரபா (pronuba yuccasella) என்ற பூச்சியால்தான் நிகழ முடியும். இப் பூச்சி முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பதற்கு இதே பூக்கள்தாம் மலரவேண்டும். ஒன்றில்லையானல் மற்றென்றின் வாழ்வு தட்ைப்படும். ஆகவே, இப் பூக்கள் மலரும் நாளே இப் பூச்சிகள் முட்டையிடுவதற்குப் பார்த்துக்கொண்டிருக்கும். பூத்த வுடன் எங்கிருந்தோ இப் பூச்சி இதை நாடிவந்து, சூலகத்தின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு துளே உண்டாக்கி, அதற்குள் முட்டை யிடும். முட்டைகளினின்று வெளிப்படும் குஞ்சுகளின் உணவிற் காகத் தாய்ப் பூச்சி இப் பூக்களிலுள்ள மகரந்தத்தைத் திரட்டும். திரட்டிய தாதுக்களைத் தன் உமிழ்நீரில் கலந்து, பசையுள்ள மாவாக்கி, முட்டையிட்ட துளேயில் நுழைத்து அதை அடைத்து விடும். சில நாளில் முட்டையிலிருந்து குஞ்சுகள் வெளிப்பட்டு, தாய் தமக்குச் சேமித்து வைத்த தாதை உண்டு வளரும். வளர்ந்து சூலகத்தில் இயங்கும்போது எஞ்சிய மகரந்தம் சூலில் நேராகப் படுவதால் கருவுறும். சூல் முற்றுவதற்குள் குஞ்சுகள் அத் துளே வழியாகவே வெளியாகிப் பறந்து செல்லும். அத்தியின் (Ficus Carica) ஒர் இனத்தில் மகரந்தச் சேர்க்கை பிளாஸ்டோபாகா (blastophaga) என்ற குளவியால் நடந்து வருகிறது. இந்த அத்தியில் காய் பழமாவதற்கு இக் குளவி வேண்டும். இக் குளவி குஞ்சு பொரிக்க இவ்வத்தி பூத்தாக வேண்டும். இவ்விரு உயிர்களின் வாழ்வும் ஒன்றையொன்று அண்டியிருக்கின்றது. அத்திக்காய், ஆல், அரசின் காய் போல ஒரு பூங்கொத்து. அத்திப்பூ பால் வேற்றுமையுள்ளது. இருந்தாலும், ஆண் பூக்களும் பெண் பூக்களும் ஒரே காயினுள் தோன்றும். ஆண் அத்தியில் உண்டாகும் காயினுள் (பூங்கொத்து) மலட்டுப் பெண் பூக்களும் (galflowers) ஆண் பூக்களும் இருக்கும். பெண் அத்தியில் உண்டாகும் காயினுள் பெண் பூக்களும் மலட்டு ஆண் பூக்களும் இருக்கும். மலட்டுப் பெண் பூவில் சூல் தண்டு குட்டை யானது. சூலுற்றுச் செயற்படும் பெண் பூவின் சூல்தண்டு நீள மானது. மலட்டு ஆண் பூக்களில் மகரந்தம் விளையாது. மலட்டுப்