பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகரந்தச் சேர்க்கை 13 I பெண்பூ குளவிகள் முட்டையிட இடங்கொடுக்கவே பயன்படு கின்றது. இப் பூவில்தான் குளவிகள் நன்கு அமர்ந்து முட்டையிட முடியும். மற்றையப் பெண் பூவில் சூல்தண்டு நீளமாக இருப்பதால் அதன் மேல் குளவிகள் அமர முடியாது ; ஆல்ை, இப் பெண் பூவில்தான் விதைகள் உண்டாக முடியும். இப் பூக்களேயுடைய பூங்கொத்துத் (காய்) தான் அத்திப்பழமாகின்றது (படம் 59). படம் 59. 1. அத்தியின் (காய்) துனர் (நீட்டுவெட்டு), 2. ஆண் பூ, 3. பெண் பூ, 4. மலட்டுப் பெண் பூ. இக் குளவிகள் குழிந்த பூத்தண்டின் பழத்தினுள்ளேயே வசித்துத் தமது வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றன. அத்தி பூத்தவுடன் பெண் குளவி அத்திக்காயின் மேல்புறத்தில் உள்ள சிறு துளே வழியாக உட்செல்லும். பிஞ்சு இனரில் இத் துளே செதில் களால் மூடப்பெற்றிருக்கும். இதனுள் மலட்டுப் பெண் பூக்கள் இருக்குமானல் குளவி அதிலமர்ந்து முட்டையிடும். இல்லாவிடில் வெளியில் வந்து மலட்டுப் பெண் பூக்களைத் தேடி அலையும். முட்டையிடப்பட்ட அந்த ஆண் அத்திகளின் (caprifgs) உள்ளே குஞ்சுக் குளவிகள் ஆணும் பெண்ணுமாக அங்குள்ள தாதுண்டு வளர்ந்துவரும். புணர்ச்சிப் பருவம் முடிந்தபின் குளவிகள் வெளிக் கிளம்பும். ஆண் குளவிகள் தாம் பிறந்த அந்த அத்தி யிலேயே இறந்துபடும். வெளியில் ஊர்ந்துவரும் பெண் குளவி களின் உடல் முழுதும் தாது ஒட்டிக்கொண்டிருக்கும். இப் பெண் குளவி பறந்துபோய் அருகில் உள்ள அத்தியில் நுழையும். இந்த அத்தி, பெண் அத்திக்காயானல் மகரந்தம் பெண் பூக்களிலுள்ள நீண்ட சூல்தண்டின் மேல்பட்டு, மகரந்தச் சேர்க்கை ஏற்படும்.