பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 தாவரம்-வாழ்வும் வரலாறும். ஆல்ை, அதனுள் நுழைந்த குளவியின் காரியம் நிறைவேருது. சூல்தண்டு நீளமாக இருப்பதால் குளவி அப் பூவில் முட்டையிட முடியாமல் மகரந்தச் சேர்க்கையைச் செய்துவிட்டு வெளிப்படும். குளவி நுழைந்தது ஆண் அத்தியானல், அதிலுள்ள மலட்டுப் பெண் பூவில் முட்டையிட்டு, அதனுள்ளே இறந்துவிடுகின்றது. முட்டைகள் குஞ்சுகளாகி மலட்டுப் பெண் பூக்களில் சூலகத்தி லிருந்து வெளியாகின்றன. ஆண் குளவிகள் இந்த ஆண் அத்தி யிலேயே இருந்து சாகின்றன. குளவிகள் முட்டையிடுதற்கும், மகரந்தம் வெளிப்படுதற்கும் அத்திமரம் ஆண் அத்திக்காய்களே உண்டாக்கவேண்டும். இல்லாவிடில் அத்தி பழுக்காது. குளவியும் முட்டையிடாது. இவ்விரு உயிர்களின் வாழ்க்கையும் முற்றுப் பெறும் பொருட்டு இயற்கையன்னே கையாளும் எத்தனையோ விந்தைகளில் இதுவும் ஒன்று.