பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருவுறல் முதிர்ந்த தாது சூல்முடியில் வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்திற் கெல்லாம் முளேக்க ஆரம்பிக்கும். சூல்முடியில் பல சுரப்பிகள் இருப்பதால், அவைகள் சுரக்கும் சர்க்கரைப் பொருள் உள்ள நீர், சூல் முடியைப் பசையுள்ளதாகச் செய்யும். இதல்ை வந்து சேர்ந்த தாது, சூல்முடியில் ஒட்டிக்கொள்ளும். அன்றி இங்குள்ள சூல்முடித் தூய்கள் (stigmatic papillae) மகரந்தத்தைப் பற்றிக்கொள்வதும் உண்டு. ஆகவே, மகரந்தம் தவறிப்போக முடியாது. அது முளைப்பதற்கு இச் சர்க்கரை நீர் உடன் இருந்து துணை செய்யும். மகரந்தம் முளேக்கும்போது தாதுக்குழாய் ஆண் கரு அணுக் களைக்கொண்டு நீண்டு வளரும் என முன்னரே கண்டோம். தாதுக்குழாய் சூலகத்தின் துளே வழியாகவும், நேராகவும், பக்கத் திலுமாக உட்புகும். வளரும் தாதுக் குழாய்க்கு வழி செய்தற் பொருட்டுச் சூல்முடியிலிருந்து சூலகம் வரையிலுள்ள உயிரணுத் தொகுப்புகள் நசிவு கொடுத்து மெலிந்து வழிவிடும் என்பர். இந் நிலையில் சூலகத்தின் நிலையையும் அறிவோம். சூல் அமைப்பு சூல் ஒட்டுத் தசையில் நுண்ணிய இழைபோன்ற சூல்தாள் (funicle) மூலம் ஒவ்வொரு சூலும் ஒட்டியிருக்கும். சூல்தாள் சூலுடன் ஒட்டியுள்ள இடத்தை விதைத் தழும்பு (hilum) என்பர். சூலின் முழு உட்பகுதியும் சூல் உள்ளணு (nucellus) எனப்படும். இதைச் சுற்றி இரு சூல் உறைகள் (integuments) உள்ளன. விதை மூடாத் தாவரங்களிலும் சூரியகாந்திக் குடும்பத்திலும் இன்னும் சிலவற்றிலும் ஒரு சூல் உறைதான் இருக்கும். சந்தனம் (santalum album), புல்லுருவி (loranthus) முதலியவற்றில் சூல் உறையே இல்லை. சூல் உறைகள் மூடுமிடத்தில் சிறு விதைத் துளை