பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 தாவரம்-வாழ்வும் வரலாறும் (micropyle) உண்டு. சூல் உள்ளணுவின் அடிப்பாகத்தை சலாசா (chalaza-சூலடி) என்று கூறுவர். சூல் உள்ளணுவில் முட்டை வடிவமான கரு மூலப்பை (embryosac) அமைந்துள்ளது. இதனுள் குவின் மிக முக்கியப் பகுதிகள் உள்ளன. கருப்பையின் வளர்ச்சி சூல் ஒட்டுத் தசையிலிருந்து நீண்டு உருண்ட ஒரு பெரிய உயிரணு கருப்பைமூலம்’ என உருக்கொள்ளும். இதைச் சூல் உள்ளனுக்கள் சூழ்ந்து இருக்கும். கருப்பைமூலம் பெரியதாக வளர்ந்து இருமுறை பகிர்ந்து பிரியும். முதற் பிரிவு குன்றற் பகுப்பு முறையால் ஆனது. இவை நான்கும் நீளமாக அமையும். இவற்றில் மேல்புறத்தில் உள்ள மூன்று உயிரணுக்கள் சிதைந்து குல்லாய் போலக் கவிந்து நிற்கும். அடியில் உள்ள உயிரணுவின் உட்கரு இரண்டாகிக் கருப்பையின் இரு நுனிக்கும் செல்லும். இவை இரண்டும் நான்காகும். திரும்பவும் இந் நான்கு உட்கருவும் பகிர்ந்து எட்டாகி, மூன்று ஒரு நுனியிலும், இன்னொரு மூன்று மற்ருெரு நுனியிலும் தங்கும். ஏனேய (நுனிக்கு ஒன்ருக மிஞ்சிய) இரண்டும் கருமூலப் பையின் நடுவில் அமைந்துகொள்ளும். இவை பின்னர், ஒன்ருகி இரண்டாங் கரு (secondary nucleus) ஆகும். விதைத் துளைப் (micropyle) பக்கமாக அமைந்த மூன்று உட்கருவும் தனித்தனியாக மிக மெல்லிய சுவரை உண்டாக்கிக் கொள்ளும். இவற்றைக் கருப்பை (egg apparatus) என்பர். எதிர் நுனியில் உள்ள மூன்று அணுக்களும் தனித்தனியாக மிக மெல்லிய சுவர் அமைத்துக்கொண்டு எதிரடி உள்ளனுக்கள் (antipodal cells) எனப்படும். கருப்பையில் உள்ள மூன்று உயி ரணுக்களில் ஒன்று முட்டை அல்லது கருவாகும். மற்ற இரண்டும் உதவியணுக்கள் (sinergids) எனப்படும் (படம் 60). ஆனகத்தில் விளேயும் தாது இரண்டு உட்கருவைக்கொண்டு சூல்முடியில் முளேக்கும். ஒன்று குழாய்க் கரு (tube nucleus). இன்னென்று பிறவிக் கரு (generative nucleus). தாதுமுளே, விதைத் துளே வழியாக, உதவியணுக்கள் விலகித் துனே செய்யக் கருப்பையுள் புகும். முளேயுள் இருக்கும் குழாய்க் கரு மறையும். மற்ற அணு பகிர்ந்து இரண்டு பிறவியனுக்களாகும். அதே நேரத்தில் விலகி நின்ற இரு உதவியணுக்களும் எதிரடி அணுக்கள் மூன்றும் மறைந்துபோகும். பிறவிக் கரு இரண்டும் முளையினின்று வெளிப்பட்டு ஒன்று கருவுடன் புணரும். இவைகள்