பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கனிகள் கருவுறல் நிகழ்ந்த பின்னர், பூவில் வியத்தகு மாறுதல்கள் ஏற்படுகின்றன. பொதுவாகப் பெண்ணகத்தைத் தவிரப் பூவின் எல்லாப் பாகங்களும் உதிர்ந்துவிடும். சிலவற்றில் ஒன்றிரண்டு ஒட்டிக்கொண்டு இருப்பதும் உண்டு. தாவர நூலில் கனி' என்பதை முதிர்ந்த சூலகம் என்று கூறுவர். சிலவேளை முதிர்ந்த சூலகத்துடன் நெருங்கிய தொடர்பு உடையதான பூவடியையும் சேர்த்துக் கனியென்று குறிப்பிடுவதும் உண்டு (முந்திரி-anacardium occidentale). சூலகத்தின் சுவர்தான் பின்னர் கனிச்சுவர் ஆகின்றது. இக் கனிச்சுவர் உலர்ந்தும் சதைப்பற்றுடனும் இருக்கும். சூல்கள் பின்பு விதைகளாகின்றன. கனிகள் பக்குவ மாகப் பழுப்பது அவற்றில் விதைகள் சரியாக அமைவதைப் பொறுத்திருக்கும். விதைகள் நன்கு உண்டாகாத கனிகள் சிறிய வையாகவும், வளமற்றவையாகவும் இருக்கின்றன. ஆங்கிலத்தில் காய்களையும் கனிகளேயும் வேறுபாடு இன்றி (fruit) என்ற சொல்லே குறிக்கும் (படம் 61). கருவுறலின்றிக் கனியாவதை வாழை, அன்னசி (ananas sativus) முதலியவற்றில் காணலாம். பயிர் செய்யப்படும் பேரிக் đi tuli (pyrus communis) esbüt?óir (pyrusmalus) opgestuus, fösöguh கருவுறல் இன்றியே கனி உண்டாகின்றது. ஆனல், விதையற்ற கனிகள் எல்லாம் கருத்தரிக்காமல் கனியானவை அன்று. சில வற்றில் கருவுறல் ஏற்பட்டபோதிலும் முளேகள் வளர்வதில் ஆல. இவற்றின் விதையற்ற தன்மைக்குச் சினேச் சிதைவே காரன மாகும. கருவுற்ற பின்னரும் சூலகத்தை ஒட்டிக்கொண்டிருந்த புல்லி வட்டம் கத்தரிக்காயில் அப்படியே நி8லத்து வளர்ந்திருக்கிறது. đ° 6 ounh &# # refustei (physalis minima) Lisbestoil: t th சூலகத் துடன் வளர்ந்து அதனே முற்றிலும் சூழ்ந்து மூடிக்கொண்டிருக்கும்.