பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1432 தாவரம்-வாழ்வும் வரலாறும் யிருக்கும். இவற்றில் கனிச்சுவர் நுனியிலிருந்து அடிவரையிலும், அடியிலிருந்து துனிக்கும் இரு பகுதியாகப் பிளந்து சுருண்டு வரும். விதைகள் சூலறைகளின் மெல்லிய கம்பி போன்ற இரு விளிம்பு களிலும் ஒட்டியபடி இருக்கும். இச் சூல் விளிம்புக் கம்பிகள் இரண்டும் மேலும் கீழும் ஒட்டியபடி இருக்கும். இதை ரெப்ளம் (replum) என்று குறிப்பிடுவர். துத்தியிலும் (abutilon hirtum) கொத்துமல்லிக் குடும்பத்திலும் (umbellifera) இன்னொரு வகையான வெடிகனி இருக்கின்றது. முதிர்ந்த கனி, சூலகத்தின் பிரிசு வர் வழியாக வெடித்து விதைகளே உள்ளடக்கி மூடியவண்ணம் பிரிகின்றது. பிரிந்த இப் பாதியிலோ பகுதியிலோ விதை வெளிப்படமாட்டா. இவை விதைச் சொப்பு (coccus) எனப்படும். விதைகள் வெளிப்படுவதற்கு விதைச் சொப்பின் உறை நாளடைவில் சிதைந்துபோகும். இவ்வகையான கனிகளைப் பிரிசுவர் வெடிகனி (schizocarp) என்று சொல்லலாம். Gissur+urgā zo–Golf 35 sofissir (Indehiscent dry fruits) இவை பழுத்தும் வெடிக்காத கனி வகைகள்; ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விதைகளே மூடி வைத்திருக்கும் உலர்ந்த கனிச் சுவருடன் கூடியவை. கனிச்சுவர் வெடிக்காததால் விதைகள் வெளி வருவதில்லே. ஆகையால், முழுக் கனியாகச் செடியிலிருந்து பிரியும் கனிச்சுவர் அழுகிப்போன பின்புதான் விதைகள் வெளித் தோன்றும். இவைகளில் சிலவகை உண்டு. நெற்குடும்பத்தில் (gramineae) ஒற்றை விதையுடைய கனிகள் ஒற்றைச் சூலகத்தில் உண்டாகி உமி ஒட்டிய கனிகளாக (caryopsis) இருக்கின்றன. நெல், சோளம், கோதுமை இதற்கு உதாரணம். நர வேலியா கிளிமாட்டிஸ் கனிகள், அக்கீன் (achene) எனப்படும். இவைகளும் ஒற்றைச்சூல் இலே ஒரறைச் சூலகத்தில் தோன்றியவை. எனினும், கனிச்சுவர் விதையுறையினின்றும் வேறுபட்டுப் பிரிந்திருக்கும். பொதுவாக இவை ஒருபூத்திரள் கனிகளாகத் தோன் றியவை. எனினும், கனிச்சுவர் விதையுறையி னின்றும் வேறுபட்டுப் பிரிந்து இருக்கும். பொதுவாக இவை ஒரு பூத்திரள் கனிகளாகத் தோன்றிப் பிரிகின்றன, சூரியகாந்திக் குடும்பத்தில் இரு குல் இலே அடி நிலேச் சூலகத்திலிருந்து உண்டாகும் கனிகள் யாவும் சிப்செலா (cypsela) எனப்படும். இவை ஒற்றைச் சூலக ஒற்றை விதைகள். கனிச்சுவரும் விதை யுறையும் பிரிந்து இருக்கும்.