பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைகளும் கனிகளும் பரவுதல் 145 படம் 64. உலர்கனி வெடித்தல் 1. அறைவழி வெடித்தல், 2. சுவர் வழி வெடித்தல், 3, 4. அறைவழியாகவும் சுவர் வழியாகவும் வெடித்து விதைகள் தங்குதல். இருக்கின்றது. கனி வெடித்தவுடன் விதைகளே க் காற்று எளிதாக எடுத்துச் செல்லும். வேங்கை மரத்தின் (pterocarpus marsupium) கனிகள் மெல்லிய பட்டையாகவும் நீள வாட்டமாகவும் கனிச்சுவர் அகன்றும் உள்ளது. இதையும் காற்று எடுத்துச் சென்று கனி பரவச் செய்யும். சூரியகாந்திக் குடும்பத்தைச் சேர்ந்த கனிகளில் எல்லாம் அல்லிவட்டம் மயிர்ப்பொருளாக மாறி இருப்பதால் கனிகள் முதிர்ந்து உதிரும்போது காற்றில் பாரசூட் (parachute) போல ஊர்ந்து சென்று பரவுகின்றன. ஆடுதின்னப்பாளேயின் கனி முதிர்ந்து வெடித்த பின்னும் விதைகள் உள்ளே ஒட்டிக் கொண்டிருக்கும். காற்றின் வேகத்தால் கனிகள் அலேக்கப்பட்டு விதைகள் உதிர்ந்து பரவுகின்றன. எருக்கு, வேலிப்பருத்தி, ஊத்தாமணி (daemia), பருத்தி முதலியவற்றின் விதைகளில் பஞ்சு இழைகள் உண்டாவதால் விதைகள் காற்றில் எளிதாக எடுத்துச் செல்லப்படுகின்றன. அன்றிப் புல் கனிகளும் ஆர் கிட்டு விதை களும் மிகவும் இலேசானவை. இவற்றை மிக எளிதாகக் காற்று மிக்க தொலேவிற்கு எடுத்துச் செல்லும். தா-10 s: