பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைகளும் கனிகளும் பரவுதல் 147 விலங்குகளால் கனி பரவுதல் இம்முறையில் கனிகளும் விதைகளும் விலங்குகளின்மேல் ஒட்டிக்கொண்டு வேறிடஞ் சேர்கின்றன. ஆடையொட்டியிலும் (triumfetta rhombifolia), aetï6afiu 1Tsŵgyrth (zornia) sy&r fàa; முட்கள் கனிச்சுவரிலிருந்து வளர்ந்துள்ளன. நாயுருவியில் (achyranthes aspera) பூவடிச் செதிலும் பூவுறை விளிம்புகளும் கூரிய முள் போன்றுள்ளன. இவை விலங்குகள் மேலும் மக்கள் ஆடையிலும் ஒட்டிக்கொண்டு போய் வேறிடங்களில் பரவு 4665rp oor (Lul-ub 65A). G45sir GebrO4 g; hart (martynia diandra) இளமையில் ஒரு சதையுள்ள உள்ளோட்டுக் கனியாக இருக்கும். முதிர்ந்ததும் சதையுள்ள வெளிப்பாகம் அழிந்துவிடக் கனியின் முனேயில் இரண்டு வளைந்த முட்கள் காணப்படுகின்றன. இவை கொக்கிகள் போல விலங்குகளின் மேல் ஒட்டிக்கொண்டு கனிகள் பரவுகின்றன. வேம்பு, ஆல் முதலானவற்றின் கனிகளைப் பறவைகள் விதையுடன் உண்ணும். அவை எச்சமிடும்போது- விதைகள் படம் 65-A. உலர் கனிகள் 1. கெருஞ்சில், 2. சாந்தியம், 3. ஆடையொட்டி, 4. புரோமஸ் 5. தேள் கொடுக்குக் காய்.