பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 தாவரம்-வாழ்வும் வரலாறும் வெளிவருகின்றன. மா, பலாக் கணிகளே மக்கள் உண்டபின் விதைகளே வேறிடஞ் சேர்க்கின்றன. வெளவால் இலுப்பைக் கனிகளே வெகு துாரம் கொண்டுசென்று விதைகளைப் பரவச் செய்யும். குன்றி (abrus precatorius), ஆமணக்கு விதைகள் முறையே கண்கவர் பழம் போலவும் சிறு பூச்சி போலவும் இருப்பதால் இவற்றைச் சில பறவைகள் விரும்பி எடுத்துச்செல்கின்றன. வேறிடஞ் சென்று பார்க்கும்போது தாம் ஏமாறிப் போனதை உணர்ந்து விதைகளே விட்டெறிவதால் விதைகள் பரவுகின்றன.