பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதையும் விதை முளைத்தலும் கருவுற்ற சூலகத்தில் பல மாறுதல்கள் உண்டாகின்றன. சூல் முதிர்ந்து முளேயாகவும் (embryo) முளே சூழ் தசையாகவும் (endosperm) ஆகும். கலவியற்ற சூல் அணுவைச் சுற்றி முதலில் செல்லுலோஸ் சுவர் ஒன்று அமைக்கப்பெறும். இது மேலும் கீழுமான இரு உயிரணுக்களாகப் பிரியும். மேற்புறத்தில் உள்ள உயிரணு பல தடவை பகிர்ந்து முன்முளே (proembryo) என்ற ஒரு குட்டையான உயிரணு வரிசையாக மாறுகின்றது. இம் முன் முளேயின் அடுத்த கோடியிலுள்ள உயிரணு முளையின் உடல மாகும். சுமார் எட்டு முதல் பத்து வரையிலுமுள்ள உயிரணுக் களாகிய இவ்வரிசைக்கு உரி (suspensor) என்று பெயர். இது சூல் உள்ளணுத் தொகுப்பிலிருந்து (nucellus tissue) வளரும் முளேக்கு வேண்டிய உணவுப் பொருள்களே உறிஞ்சிக் கொடுக்கும். முளே வளர வளர உரி சிதைந்து ஒழியும்; அடிப்புறத்தில் பகுக்கப் பட்ட உயிரணு முளையணுவாகிப் பருத்து வளரும். வளரும்போது உயிரணுக்களின் முப்புறப் பிரிவில்ை ஒவ்வொன்றிலும் நான்கு உயிரணுக்களேக்கொண்ட இரு அடுக்குகள் ஏற்படும். உரியை ஒட்டியுள்ள நான்கு உயிரணுக்கள் முளேயாகவும் (radicle) முளே கீழ்த்தண்டாகவும் (hypocoty) வளரும். உரியின் எதிரில் உள்ள நான்கு உயிரணுக்கள் பிரிந்து பருத்து முளேக் குருத்தாகவும் (plumule) முளேயிலே (விதையிலே)களாகவும் வளரும். இவ்வாறு வளரும்போது முளையின் உடலம் அகன்றும் சிறிது தட்டையாகவும் ஆகி இரு முளையிலேகளும் இவற்றிற்கிடையே முளே மேல்தண்டும் வளர ஆரம்பிக்கின்றது. இரண்டாங் கருவும் (secondary nucleus) இரண்டான பிறவிக் கருவில் (generative nucleus) ஒன்றும் கலந்து முளேசூழ் தசை (endosperm) யாகும் என்று முன்னமே அறிந்தோம். கலந்த அணுக்கள் ஒன்ருகிப் பல உட்கருவைத் தோற்றும். உயிர்த் தாது ஒவ்வோர் உட்கருவையும் சுற்றிக்கொண்டு இடையில் சுவர்களே