பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தாவரம்-வாழ்வும் வரலாறும் அடைத்துக்கொள்ளும். இங்ங்னம் தோன்றிய உயிரணுத் தொகுப்பு முளே சூழ் தசையாக (endosperm) மாறும். குல் உள்ளதுத் தொகுப்பிலிருந்து முளே வளர்வதற்குச் சேகரித்து வைக்கப்பட்ட உணவைப் பெற்றுக்கொள்ளும். இவ்வாறு வளரும் முளே சூழ் தசை விதை முளேக்கும்போது அதன் வளர்ச்சிக்கு வேண்டிய உணவுப் பொருள்களேத் திரட்டிவைக்கும் பேழையாக இருக்கும். ஆனால், பல விதைகளில் முளே சூழ் தசை இருப்பதில்லே. அதற்குக் காரனம் முளேக் கரு வளரும்போது அங்கிருந்த எல்லா உணவுப் பொருளும் உறிஞ்சப்படுவதால் எஞ்சி நிற்பது யாது மின்றி விதைகள் முளே சூழ் தசையற்றனவாக இருக்கின்றன. இருப்பினும், ஆமணக் குப் போன்ற விதைகளில் முளே சூழ் தசை விரைவாக வளர்ந்துவிடுவதால் முளைக் கரு உணவுப் பொருள்களே முற்றிலும் பயன்படுத்துவதில்லே. எள்ளின் குடும்பத்தைச் சேர்ந்த விதை களில் சூல் உள்ளணுத் தொகுப்பு முழுதும் உண்ணப்படாமல் சிறிது எஞ்சி நிற்கும். அதற்கு முளேப்பை சூழ் தசை (perisperm) th H என்று பெயர். மற்றும் சூல் உறைகள் இரண்டும் விதையுறைகளாக மாறு கின்றன. வெளியுறை அவரைக் குடும்பத்தைச் சார்ந்த விதை களில் நன்கு தடித்து இருக்கும். சில விதைகளில் ஒருவிதையுறை மட்டும் இருப்பதுண்டு. சில ஒட்டுண்ணியின் (parasite) விதை களில் உறையே இருப்பதில்லே. அல்லியிலும் சாதிக்காயிலும் (myristica) சூல் தாள் (funicle) குலேச் சூழ்ந்து வளர்ந்து பத்திரியாக (aril) மாறும். சில விதைகளில் (ஆமணக்கு) விதைத் துளேயின் பகுதி சற்று வளர்ந்து விதைமுண்டு (caruncle) எனப் பெயர் பெறும். குல்தாள் இருந்த இடம் விதையில் சூல் தழும்பாகக் (hilum) காணப்படும். விதை முளைத்தல் அவரை விதையை உதாரணமாக எடுத்துப் பார்த்தால் விதையுறைகள் விதையை மூடிக்கொண்டிருப்பதைக் காணலாம். விதைத் தழும்பு விதையில் மிக நீளமாக உள்ளது. தழும்பை மூடிகுற்போல வெண்மையாகவும் சவ்வு போலவும் இருப்பதை பத்தரி (aril) என்பர். இது சூல்தாள் வளர்ச்சியில் உண்டாகும். அதன் மேற்புறத்தில் விதைத் துளே இருக்கும். ஊற வைத்த -விதையைச் சற்று அமுக்கினல் விதைத் துளே வழியாக நீர் வெளிப் படும். விதைத் தழும்பின் உட்புறத்தில் விதையுறையை ஒட்டிகு ற் போல நுண்ணிய, நீட்டுவாக்கில் உள்ள குழாய்த்தசை (tracheid bar) காணப்படும். அவரைக் குடும்பத்தில் இது பல வடிவில்