பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதையும் விதை முளேத்தலும் 157 படவேண்டும். இக் கனியை உள்ளோட்டுக் கனியெனக் கண் டோம். கனிச்சுவர் இதில் மூன்று பாகங்களே யுடையது. மேல் தோல் (epicarp) புறத்திலும், உள்ளே உள்ளோடு கொட்டாங் கச்சியாகவும், நடுப்பகுதி (mesocarp) இடையில் நாராகவும் இருப்பதை நாம் அறிவோம். ஒட்டிற்குள் பழுப்பு நிறமான விதை யுறையால் மூடப்பட்டிருக்கும் தேங்காய்தான் தென்னம் விதை. இந்த வெண்மையான தேங்காய் முளே சூழ் தசையேயாம். இதன் முளே மிகச் சிறியது. ஒட்டில் மூன்று கண் கள் கானப்படும். இக் கண்கள் ஒன்றின் கீழ்ப்புறமாய் முளே சூழ் தசையுள் பதிந்த வண்ணம் முளேயிருக்கிறது. மு ளே .ே வ ரு ம் முளேக் குருத்தும் கொண் ட ஒரே முளையிலேதான் இம் முளேக்குள் இருக்கும். சாதாரணமாக தேங்காயினுள் இப் பாகங்கள் புலப்படமாட்டா. ஆனல், முற்றிய காயில் விதை முளேக்க ஆரம்பித்த பின்னர் இவற்றை எளிதில் காணலாம். விதையின் ஒரு பாகம் முளே வேருட னும் முளேக் குருத்துடனும் ஒட்டின் துளே ஒன்றின் வழியாக வெளி வருகிறது. மற்ருெரு பெரும்பாகம் ஒட்டினுள் விதைக்குள்ளேயே பின்தங்கி வியக்கத்தக்க மாறுதலே அடைகின்றது. பின்தங்கிய இம் முளேப்பாகம் முளே சூழ் தசையின் உயிரணுத் தொகுப்பனேத்தை யும் உறிஞ்சிக்கொண்டு மிகப் பெரியதாகி ஒட்டுக்குள்ளிருக்கும் இடம் முழுதும் வியாபித்துவிடும். இதைத்தான் உண்மையான தோங்காய்ப் பூ (cocoanut flower) என்று சொல்லவேண்டும். தேங்காயைத் திருகி, அதனைத் தேங்காப் பூ” என்று கூறு கின்ருேம். இது திருகப்பட்ட முளே சூழ்தசையாகும். உண்மையான தேங்காய்ப்பூ என்பது நல்ல இனிப்புடையது. முளே சூழ் தசையில் EE ETT EIT எண்ணெய் முதலான பொருள்கள் கரைக்கப்பட்டு அவற்றை முளையிலே உறிஞ்சியிருப்பதால் இந்தத் தேங்காய்ப்பூ மிக இனிமையுடையதாக இருக்கின்றது. முளேயிலே தடித்த உருண்டை வடிவமான அமைப்புடையது. விதை முளேத்ததும் வளர்கின்ற முளே வேருக்கும் முளேக் குருத்துக்கும் இம்முளேயிலே உன வைச் செலுத்திக்கொண்டிருக்கிறது. முளே வேரும் முளே க் குருத்தும் சேர்ந்ததான முளேத்தண்டு (primary axis) தடித்து வளர வேர்கள் ஒன்றன் பின் ஒன்றகத் தோன்றிக் கிழ்நோக்கி வளர ஆரம்பித்து முடிவில் நார் மட்டையைப் பிளந்துகொண்டு வெளி வந்து முதல் இலேத்தொகுதியாக விரிவடைகிறது. arrLisārasar (Rhizophora mucronata) இது உப்பங்கழியில் வளரும் சிறு மரம். உப்பங்கழித்தாவ ரங்கள் அடியில் உவர்நீர் தேங்கி நிற்கும். நிலம் சதுப்பானது. இதனேக் கண்ட மரம்’ என்றுங் கூறுவர். பெரும்பாலும் விதைகள்