பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 தாவரம்-வாழ்வும் வரலாறும் தாம் முளேப்பதற்கு முன் சிறிது காலம் செயலற்ற நிலேயில் இருப் பவையே ஆயினும், சுரபுன்னேயின் கனிகள் முதிர்ந்தவுடன் மரத் தில் இருக்கும்போதே முளேக்க ஆரம்பிக்கின்றன. இக் கனியில் முதலில் இருவிதைகள் உண்டானபோதிலும் கடைசியில் ஒரு விதைதான் முற்றுகிறது. ஆமணக்கு விதையைப் போலச் சுர புன்னே விதையில் முளே சூழ்தசை மிகுதியாக உள்ளது. விதையிலே குல்லாய் போன்றது. இதன் கீழ்ப்பாகம் ஒர் உறை போன்று இருக்கிறது. முளேக்கீழ்த் தண்டும் முளேக்குருத்தும் இவ்வுறையால் மூடப்பட்டிருக்கும். விதை முளேக்கத் தொடங்கியவுடன் முளேக் கீழ்த்தண்டு விதையிலே உறையைக் கிழித்துக்கொண்டு கீழ் நோக்கி நீண்டு பழத்திற்கு வெளியே வருகின்றது (படம் 70). முளே சூழ் தசையில் உள்ள உண வைப் பெற்று இம் முளைக்கீழ்த் தண்டு சுமார் ஒன்று முதல் ஒன்றரை அடி நீளம்வரை வளர் கிறது. இவ்வாறு சுரந்து வளர்வதற்கு ஏறக்குறைய மூன்று மாத மாகும். இந்நிலேயில் முளேக் கீழ்த் தண்டின் கனம் தாங்காமல் இது - கனியுடன் பிய்த்துக்கொண்டு விழும். முளேக்கீழ்த்தண்டு, குருத்தை யும் விதையிலேயுறையையும் விட்டு வெளியில் இழுத்துக்கொண்டு கனியிலிருந்து வேருகிக் கீழே விழுவதுண்டு. கீழேயுள்ள சதுப் புச்சேற்றில் இது விழும் வேகத்தால் ஆணிபோலப் பதிந்து ஒட்டு வேர்களே உண்டாக்கிக்கொண்டு தனிச்செடியாக வளரும். இம் மரங்கள் எப்பொழுதும் உப்பங்கழியில் வளர்வதால் கீழே விழும் விதைகள் அழுகிக் கெட்டுப்போக நேரும்; முளேத்து வர இயலாததாகிவிடும். இதிலிருந்து தப்புவதற்குத் தாய்மரம் விதைகளே நன்கு முளேத்துவரும் வரை பேணிவளர்க்கும். இந்த ஏற்பாட்டை மரங்களின் தாய்மை’ எனத் தாவர அறிஞர்கள் வியந்து கூறுவர். உயிருள்ள விதைகள் முளேப்பதற்கு முக்கியமாக வேண்டப் படுபவை (1) ஈரம், (2) உயிர்வளியுடன் வீசும் காற்று, (3) தக்க வெப்பநிலை. விதை ஊறிப் பருத்து மெதுவாவதற்கும், அதிலிருந்து முளே எளிதில் வருவதற்கு மன்றி, நொதிகள் உண்டா வதற்கும் 鸟帝 அவசியமானது. விதையிலேகளிலும் முளே சூழ் தசையிலும் உள்ள உணவுப் பொருளேக் கரைப்பதற்கும் நீர் வேண்டும். செயலற்றுக் கிடக்கும் முளேயைச் செயற்படுத்தவும் நீர் தேவைப்படும். உயிருள்ள பொருள்கள் அனைத்தும் சுவாசிக்கும்; முளையும் இளஞ்செடியும் வளர்ச்சியுறும். உயிர்த்தொழிலுக்கு அவசியம் காற்று வேண்டும். விதையுள் காற்றுப்புக இடமின்றி நீர் நிறைந்துவிடுமானல், சுவாசம் தடைப்பட்டு முளே கிளம்ப முடியாது. நீரும் காற்றும் விதை முளேத்தலுக்கு அவசியமாவது போல வெப்பமும் உயிர்த் தாதுவிற்கு இருக்க வேண்டும். வெப்பம்