பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விதைகளும் விதை முளேத்தலும் 16.1 மிகினும் குறையினும் முளேக்குத் தீங்கு செய்யும். அன்றி, விதைகள் முளேப்பதற்கு வெளிச்சம் தேவையில்லே. தக் காளி முதலிய விதைகள் இருட்டறையில் நன்ற க முளைக்கும். ஆனல், முளே கிளம்பியவுடன் வெளிச்சம் அவசியம் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் முளேகள் மிகவும் நீண்டு பச்சையம் உண்டாகாமல் வெளுத்துப்போய்விடும். இவையனைத்தும் தக்கவாறு அமைந்திருந்தால்தான் விதை முளேத்து நன்கு வளரும் என்பதை ஒரு சோதனையின்மூலம் காணலாம். ஒரு மரக்கட்டையில் இரு நுனியிலும் நடுவிலுமாக விதைகளேப் பொருத்தி ஒரு கண்ணுடிப் பாத்திரத்தில் வைத்து, நடுவில் உள்ள விதை பாதி மூழ்கும்வரை தண்ணிர் ஊற்றி வெப்பமான இடத்தில் வைக்க வேண்டும். சில நாட்களில் நீரில் மூழ்கியுள்ள அடிவிதையும் நடுவிதையும் முளேத்து வருவது தெரியும். ஆனல், நடுவிதைக்கு எல்லாப் பொருள்களும் தக்க முறையில் அமைந்திருப்பதால் நன்கு வளர ஆரம்பிக்கும். மேல் விதையில் நீர் இருப்பதாலும் காற்றுப் புக முடியாது போவதாலும் வளர இயலாது. அப்படியே அதிக வெப்பமுள்ள இடத்திலாவது, அன்றி அதிகக் குளிர்ச்சியான இடத்திலாவது இக் கண்ணுடிப் பாத்திரத்தை வைத்துப் பார்த்தால் நடுவிதையின் வளர்ச்சியும் தடைப்பட்டுப்போவது தெரியும். தா-11