பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றல் பகுப்புமுறை (Meiosis) உயிரணுக்களின் பகுப்புமுறைகளேப்பற்றி முனனா அறநது கொண்டோம். இம்முறைகள் வளரும் உயிரணுக்களில் காணப் படும். குன்றல் பகுப்புமுறை என்பது இனம் பெருக்கும் உயிரணுக் களில் காணப்படுவது ஆகும். எல்லா உயிரணுக்களுக்கும் ஒரு வண்ணத் துண்டு எண்ணிக்கை (chromosome number) உண்டு என்பதையும், அவ் வண்ணத்துண்டுகளில் உயிர்களின் பண்புகள் அனைத்தும் பொதிந்துள்ளன என்பதையும் கண்டோம். பண்புகள் ஜீன் (gene) என்ற நுண்ணணுவில் அமைந்துள்ளன. உயிரணுப் பகுப்பின்போது அவ் வியல்புகள் மாருமல் பகுக்கப்பட்ட உயிர ணுக்களில் வந்து தங்கும். அதுபோல ஒர் இனத்தைச் சார்ந்த இரு உயிரணுக்கள் கலந்து ஒன்ருகிப் புதிய ஓர் உயிரணு உண்டாகும் போதும் கலவியனுக்களின் இயல்புகள் மாறுவதில்லை. வண்ணத் துண்டு எண்ணிக்கையும் பெருகுவதில்லே. எடுத்துக்காட்டாகப் பஐன மரத்திற்கு 2x=36 வண்ணத் துண்டுகள் உள்ளன. ஆண் பஐனயில் 2 =36 வண்ணத் துண்டுகளும், பெண் பனேயில் 2x=36 வண்ணத் துண்டுகளும் உள்ளன. ஆண் பனேயின் தாதுவாகிய உயிரணுவும், பெண் பனேயின் கருவாகிய உயிரணுவும் கலந்து ஒர் உயிரணுவாகி, அது பிஞ்சாகி, காயாகி, கனியாகி, கனியுள் விதையாகி, விதையுள் முளேக் கருவாகி (embryo) வளர்கின்றது. இதையும் முன்பே அறிந்தோம். இங்ங்னம் பனேயின் கலவி உயிரணுக்களாகிய தாதுவிலும் கருவிலும் உள்ள வண்ணத் துண்டுகள் ஒன்றுசேர்ந்து 2x=72 ஆகுமே! இவை அடுத்த தலே முறையில் கலக்கும்போது 2x=144 ஆகுமே! தலைமுறைக்குத் தலேமுறை இவ்வெண்ணிக்கை பெருகிக்கொண்டல்லவா போகும்! ஆனால், இவ்வாறு வண்ணத் துண்டுகளின் எண்ணிக்கை பெருகா மல் பனேக்கு இயல்பாக உள்ள 2x=36 அல்லது t=18 வண்ணத் துண்டு எண்ணிக்கையை நிலையாகக்கொண்டு நிகழும் பகுப்பு முறைதான் குன்றல் பகுப்புமுறை (reduction division) அல்லது