பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றல் பகுப்புமுறை 163 மியாசிஸ் (meiosis) என்று கூறப்படும். உயிர்களில் இனம் பெருக்கும் கலவி உயிரணுக்கள் உண்டாகும்போது இந்தக் குன்றல் பகுப்புமுறை காணப்படுகின்றது. மகரந்தப் பையில் தாது உயிரணு உண்டாகும்போதும் சூலகத்தில் கரு உயிரணு உண்டாகும்போதும் இதனேக் காணலாம். உதாரணமாக, ஒரு பூவில் தாது விளேவதைப் பார்க்கலாம். ஒவ்வொரு தாதிழையிலும் நான்கு மகரந்தப் பைகள் இருக்கின்றன. இவற்றின் புறத்தோல் ஓர் உயிரணுப் படையாக உள்ளது. இதற்குள் புறத்தோலே ஒட்டிய வண்ணம் ஒர் உயிரணுப்படை காணப்படும். இதனே டபீட்டம் (tapetum) என்பர். இதற்கும் உள்ளே தாதுத் தாய் மூல அணுக்கள்(pollen mother-cells) நான்கு அல்லது ஐந்து அடுக்காக இருக்கும். ஒவ்வொரு தாய் மூல அணுவும் பகிர்ந்து நான்கு தாதுக்களாகின்றன (pollen). தாதுத் தாய் மூல உயிரணுவில் உள்ள உயிர்த்தாது நன்கு தொழிற்பட்டுக்கொண்டு இருக்கும். பின்னர் உட்கரு சிறிது ஒய்ந்து காணப்படும். இதற்கு ஒய்வு உட்கரு (resting nucleus) என்று பெயர். உட்கருவில் உள்ள வண்ண வலேப்பின்னல் (chromatin reticulum) <fi<i. a56)?j. i, 351, 1 1(3 urit G3 1 roiì»(prophase) sr 65r p முன்னிலேயை எய்தும். இந்நிலேயிலேயே குன்றல் பகுப்பு முறையில் நிகழ வேண்டிய பல முன்னேற்பாடுகள் தொடங்கிவிடுகின்றன. இதனே நான்கு வேறுபட்ட நிலேகளாக்கிக் கூறுவர். முன்னிலையில் முதலில் உள்ளது லெப்டொடின் (leptotene) என்பது (படம் 71-1). இந்நிலேயில் வண்ண வலேப்பின்னல் பிரிந்து தனித்தனி நீண்ட வண்ண இழைகளாக அமைகின்றது. இவை இரட்டை எண்ணிக் கையானவை (2 :). ஒவ்வொரு வண்ண இழையும் (chromatid) ஒவ்வொரு வண்ணத் துண்டேயாம். இழைகள் தனித்து ஒன்று போ\லத் தோன்றுமாயினும், ஒவ்வொன்றும் இரட்டை இழைகளான அமைப்பைப் பெற்று இருக்கின்றன. அடுத்தபடி சைகோட்டீன் (zygotene) (புடம் 71-2). இதில் தனித்தனியாக இருந்த வண்ண இழைகள் இரண்டு இரண்டாக இணைகின்றன. இந்த இணைப்பில் ஒரு முக்கிய நிகழ்ச்சி நோக்கத் தக்கது. உதாரணமாக, இதில் ஆறு வண்ண இழைகள் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இந்த ஆறில் மூன்று ஆண் மூல இழைகள்; மற்றைய மூன்றும் பெண் மூல இழைகள். தாதுவாகிய உயிரணுவில் பெண் மூல இழைகள் ஏது என மயங்குதல் வேண்டா. இந்தத் தாது உண்டாகும் செடி ஆண் பெண் மூலமான கலவி உயிரணுக்களின் கலப்பால்தானே