பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 தாவரம்-வாழ்வும் வரலாறும் நான்கு நுண் ணிய இழைகளால் ஒன்றனதுபோலத் தோன்றும், (படம் 71-3). சைனப்சிஸ் பிணேப்பினுல் ஒன்றுபட்டு வண்ணத் துண்டுகளாகத் தோன்றும் இழைகள் இரண்டும் பிரியத் தலைப்படும் நிலைக்கு டிப்ளோட்டீன் (diplotene) என்று பெயர். இவை பிரியும் போது ஒன்ருயினேந்த பகுதி முதலிலும், பின்னி ஒட்டிக்கொண்டி ருந்த பகுதி சற்றுத் தாமதித்தும் பிரிவதால் வண்ண இழைகள் பல வடிவில் காணப்படும். அன்றி இழைகளின் நீளம் குறைந்து தடிப்பேறுவதும் இந்நிலேயில் தொடர்ந்துள்ளது. வண்ண இழைகள் வண்ணத் துண்டுகளாகும் (chromosomes) இந்நிலையில் இவற்றின் உள்ளே இருக்கும் குரோமோனிமா (chromonema)என்ற அணுவிழை மூலம் சுருண்டு வளேயும். அடுத்தபடி வண்ணத் துண்டுகள் எல்லாம் உட்கருவின் முழுவிடத்தும் பரவி, ஒன்றை விட்டு ஒன்று விலகித் தனித்தனியாக அமைந்துகொள்ளும். இந் நிலையில் டயாகினெசிஸ் (diakinesis)வண் ணத் துண்டுகளே எண்ணமுடியும். இந்த எண்ணிக்கை குன்றல் பகுப்பு முறையில் ஆக இருக்கும். இதனே ஒற்றை எண்ணிக்கை (haploid number) என்பர். இதே தாவரத்தின் வளர் பகுதியில் இரட்டை (diploid) எண்ணிக்கையாகக் காணப்படுவதும், தாதுத் தாய் மூல அணுவில் காணப்படுவதும் பாதியாகி, இந் நிலையில் ஒற்றை எண்ணிக்கையாகத் தோன்றும். இந் நிலைகள் எல்லாம் குன்றல் பகுப்பு முறைக்கு முதல் நிலைகளேயாகும். அடுத்த நிலைக்கு முதல் மெட்டாஃபேஸ் (metaphase I) என்று பெயர். இதில் வண்ண இணேப்புகள் (bivalents) உட்கருவின் நடுப் பகுதியில் வந்து சேர்கின்றன. இரு இழைகளிலும் உள்ள கைனிடோகோர் (kinetochore) உட்கருத் துருவங்களே (poles) நோக்கியிருக்கும். இந் நிலையில் வண்ண இணேப்புகளாகிய வண்ணத் துண்டுகளேத் துருவத்திலிருந்தும் பக்கங்களிலிருந்தும் காண முடியும். துருவப் பார்வையில் (polar view) வண்ணத் துண்டுகளே நன்கு எண்ண இயலும். இதற்கு அடுத்தபடியாக உள்ளது, முதல் அனஃபேஸ் (anaphasel) நிலே ஆகும் (படம் 73-7). இந் நிலையில் வண்ணத் துண்டுகள் ஒவ்வொன்றும் உயிர்த்தாதுத் தடிப்பால் இணேக்கப்பட்டு, இரு துருவங்களுக்கும் எதிர்ப்புறமாக இழுக்கப்படுகின்றன. சைனப்சிஸ் பினேப்பால் ஒன்ருன இழை இணைப்புகள்ான வண்ணத் துண்டுகள் ஒன்றையொன்று தள்ளுவ தாலும், துருவங்களிலிருந்து இவற்றுடன் தொடர்புகொண்டிருக்கும் உயிர்த் தாதுத் தடிப்புச் சுருங்குவதால் எதிர்ப்புறமாக இழுக்கப் படுவதாலும், நீட்டுவாக்கில் பிரிந்து நகரும். பிரியுங்கால், ஒவ்வொரு வண்ணத் துண்டிலும் உள்ள ஆண் இழையும் பெண்