பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றல் பகுப்புமுறை 167 னிழையும் முழுதாகப் பிரியக்கூடும். பெரும்பாலும் ஆண் இழைப் பகுதியோ அல்லது பகுதிகளோ பெண்ணிழையுடன் ஒட்டிக் கொள்வதும், அதற்கு பதிலாக அந்த அளவிற்குப் பெண்ணிழைப் பகுதியோ, பகுதிகளோ ஆண் இழையுடன் ஒட்டிக்கொண்டு பிரிவதும் உண்டு. இவ்வாறு ஒட்டிக்கொள்ளும் ப்குதியில் உள்ள பண்புகள் ஆணிழையிலிருந்து பெண்ணிழையிலும், பெண் னிழையிலிருந்து ஆணிழையிலும் மாறி அமைந்து பிரிகின்றன. இந் நிலையில் இவை V போலவும் U போலவும் காணப்படும். துருவங்களே நோக்கி நகர்ந்து ஒன்ருகும் வண்ணத் துண்டுகள் எல்லாம் ஆனிழைகளாகவோ, பெண்ணிழைகளாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லே. பெரும்பாலும் இவை கலந்தே இருக்கும். இவ்விரு தொகுதிகளேயும் சுற்றி உட்கருச் சவ்வு உண்டாகும். இந் நிலேக்கு புதல் lą (360rs%C3L16ño (telophase I) என்று பெயர். இனி, இரு தொகுதியிலுமுள்ள வண்ணத் துண்டுகள் சாதாரண பகுப்பு முறையில் நான்கு பகுதிகளாகின்றன. பாக்கிட்டீன் நிலையில் நான்கு இழைகளாகத் தோன்றிய வண்ணத்துண்டுப் பாதிகள் ஒவ்வொன்றும் இந் நிலேயில் (இரண்டாம் புரோஃபேஸ்prophase11) நீண்டு இரட்டை இழைகளாகக் காணப்படும். இவை கைனிடோகோர் பகுதியில் மட்டும் ஒட்டிக்கொண்டு பரவலாக இருப்பதும் தெரியும். அடுத்தபடி இவை இத் தொகுதியின் நடுவே அமைந்து இதன் துருவங்களிலிருந்தும் இனேக்கப்பட்டு. இரண் டாம் மெட்டாபேஸ் (metaphase II) நிலையை அடையும். இழைகள் முன்போல இதன் இரு துருவங்களுக்கும் நகரும் இரண்டாம் அனஃபேஸ் நிலையில் மாற்றங்கள் எதுவுமில்லே. இவ்வாருக இவற்றின் துருவங்களில் நான்கு தொகுதிகளாகப் பிரியும் வண்ணத் துண்டுகள் இரண்டாம் உலோஃபேஸ் (telophase II) நிலையில் தம்மைச் சுற்றி சவ்வுச் சுவரமைத்துக்கொண்டு நான்கு தாதுக்களாகின்றன. ஒவ்வொரு தாதுவிலும் தாதுத் தாய் உயி ரனுவில் இருந்த வண்ணத் துண்டுகளின் பாதி எண்ணிக்கை தான் காணப்படும். இந்த எண்ணிக்கை பாதியாகக் குன்று தலின் இதற்குக் குன்றற் பகுப்பு முறை என்ருயிற்று. குன்றல் பகுப்புமுறை பல உண்மைகளே வெளிப்படுத்து கின்றது. குறித்த எண்ணிக்கை ஒவ்வொரு தலேமுறையிலும் காணப்படு கின்றது. இல்லாவிடில், தொல்லே நம் பிறவி எண்ணிற் கடங்கா