பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#70 தாவரம்-வாழ்வும் வரலாறும் அன்றி சைனப்சிஸ் (synapsis) இணைப்பிலுைம், டயா கினெ சிஸ் (diakinesis) கலப்பினுலும், வண்ண இழைப் பகுதி களின் மாற்றத்தாலும் ஒரு செடியில் உண்டாகும் இளஞ் செடிகள் அனைத்தும் தாய்ச் செடியின் இயல்புகளே எல்லாம் முற்றிலும் பெற்றிருப்பதில்லை. ஏதேனும் சிறு மாறுபாடு இருக்கத்தான் செய்யும். இளஞ்செடிகள் தமக்குள்ளேயும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை. சிற்சில நுண்ணிய வேறுபாடுகள் காணப்படு கின்றன. இதல்ை புதுப்புது இயல்புகளே உடைய புதுப்புது இனங்கள் (species) இயற்கையாக உண்டாகிக்கொண்டே இருக் கின்றன.