பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#603-3,6ir (Tissues) ஒரேமாதிரியான உயிரணுக்கள் தாவரத்தின் ஒரு பாகத்தில் சேர்ந்தாற்போல அடர்ந்திருந்து ஒரு தொழில் செய்யுமானல் அவற்றைத் தசை என்று கூறலாம். ஒரு தசையில் உள்ள உயி ரணுக்களைப் பொறுத்தமட்டில் தசைகளே இருவகையாகப் பிரிக் கலாம். அவை சாமானிய தசைகள் (simple tissues) என்றும், சிக்கலான தசைகள் (complex tissues) என்றும் கூறப்படும். சாமானிய தசைகள் மூன்று வகையானவை. அவை சோற்று உயிரணுத் தொகுதி (parenchyma), மூலே தடித்த உயிரணுத் தொகுதி (collenchyma), சுவர் முழுதும் தடித்த காழ் உயிரணுத் தொகுதி (sclerenchyma) எனப்படும். சிக்கலான தசைகள் தாரு (xylem) என்றும், சல்லடைக் குழாய்த் தொகுதி (phloem) என்றும் இருவகைப்படும். சோற்றுயிரணுத் தொகுதி (Parenchyma): இத் தொகுதியில் காணப்படும் உயிரணுக்களே மற்ற எல்லா வகையான உயிரணுக் களுக்கும் மூலமானவை என்று கூறலாம். இவற்றின் குறுக் களவுகள் ஒரேமாதிரியாக இருக்கும். உயிரணுச் சுவர் மெல்லியது; உயிர்த்த்ாதுவும் உட்கருவும் நன்கமைந்துள்ளன ; உயிரணுப் பகுப்பு முறைக்கு ஏற்றவை ; தாவரங்களில் பொதுவாக எல்லா உறுப்புகளிலும் மிகுதியாக இருப்பவை. தண்டின் நடுவில் உள்ள உட்சோறு, இலேகளின் உட்பகுதி, கனிகளில் உள்ள சதைப்பற்று முதலியவை சோற்று உயிரணுக்களால் ஆக்கப்பட்டவை. அன்றிப் பல வேறு வகையான உயிரணுக்களேயுடைய தாரு, சல்லடைக் குழாய்த் தொகுதிகளிலும் சோற்று உயிரணுக்கள் (படம் 74-1) இருக்கும். மூலே தடித்த உயிரணுத் GğrGÊ (Collenchyma) (ul-ih 74-2): இளந்தண்டுகளுக்கு வன்மையும் உறுதியும் கொடுப்பதற்கு இவ் வுயிரணுக்கள் பயன்படுகின்றன. இவை மெதுவாகவும், வலி