பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 தாவரம்-வாழ்வும் வரலாறும் பாகத்தில் விரிந்தும் இருக்கின்றது. ஊறவைத்த விதையை நீட்டுவாக்கில் பிளந்து அயோடின் (iodine) கொஞ்சம் தடவிப் பார்த்தால் விதைகுழ்தசையும், விதையிலேயும் வெவ்வேறு நிற மாகப் பிரிந்து தோன்றும். இவற்றைப் பிரித்தால் இடையில் ஒரு சிறுபடை (layer) உண்டு; இது வேண்டிய உணவை முளே சூழ் தசையிலிருந்து சேர்ப்பிக்க உதவும். விதையிலையில் அமைந்துள்ள முளேயின் ஒரு முனே முளே வேராகவும் மற்ருெரு முனே முளேக்குருத் தாகவும் இருக்கின்றது. இவ்விரண்டையும் தனித்தனியான இரு கவசங்கள் மூடியுள்ளன. விதையினுள் முளே சும்மா இருக்கும் சுகம் பெற்றுள்ளது. தக்க சூழ்நிலை ஏற்பட்டால் அஃதாவது, நீரும், காற்றும், ஒரளவு வெப்பமும் பெற்ருல் விதை முளேக்கும். முளேக்கும் ஆற்றல் பல விதைகளில் பலவாறு அமைந்துள்ளது. சில விதைகள் பல ஆண்டுகள் கழிந்த பின்னரும் முளேக்கும் ஆற்றலுடையனவாக இருக்கின்றன. சரியானபடி பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் விதைகள் இயல்பாக முளேக்கும் கால வரம்பிற்கு மேற்பட்டும் முளேத்துவருகின்றன. தக்க பாதுகாப்பு இல்லாதபோது விதைகள் முளேக்கும் ஆற்றலே இழந்துவிடுவது முண்டு. முதலில் விதைத்துளே வழியாகவும், விதைத் தழும்பு வழியாக வும், விதையுறைமூலமாகவும் விதைகள் நீரை உட்கொண்டு உறிஞ்சிப் பருகும். முளே தன்னைச் சுற்றியுள்ள விதையிலே அல்லது முளே சூழ் தசையிலிருந்து உணவை உட்கொண்டு வளரத் தொடங்கும் (படம் 68). இது உயிர்த்தொழில். இதன் விரிவை முன்னர் அறிந்தோம். விதைகள் முளேக்கும்போது முதலில் வெளிவருவது முளேவேராகும். விதையுறையை அல்லது கனியுறையைக் கிழித்துக்கொண்டு முளே வேர் விதைத் துளே வழியாக வெளிப்படும். வெளிப்படுங்கால் விதைத் தழும்பிலும் விதைத்துளையைச் சுற்றிலும் நுண்ணிய பிளவுகள் விதையுறையில் உண்டாகின்றன. பல்வேறு விதைகளில் பலவிதமான பிளப்புகள் உண்டாகின்றன. முளே வேர் நீண்டு மண்ணில் ஊன்றிக்கொள்ளும் பருவத்தில் முளேக் குருத்து வெளிப்படும். முளே வேர் நிலத்தில் கீழ்நோக்கி வளரும் இயல்புடையது. முளேக்குருத்துடன் விதையிலேகள் சேர்ந்தே வளரும். வெண்மையாகவும், மஞ்சளாகவும் உள்ள விதையிலேகள் சூரிய வெளிச்சம் பட்டு வளரும்போது பச்சை நிறம் பெறுகின்றன. விதையிலேகள் சில செடிகளில் ஒன்றிரண்டு நாட்களில் உதிர்ந்து விடும். சிலவற்றில் இவை பல நாட்களுக்கு, முளேத்து வரும் செடி யில் ஒட்டிக்கொண்டிருந்து இலேத் தொழில் செய்வதுமுண்டு.