பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசைகள் 173 யுடையதாகவும் இருக்கின்றன ; தண்டுகளின் புறப் பகுதியில் அமைந்து தண்டு நிமிர்ந்து நின்று உறுதியாக வளர்வதற்குத் துனேயாகின்றன. இத் தொகுதி பலவகையான வடிவில் சற்று நீண்ட உயிரணுக்களால் ஆனது. உயிரணுச் சுவர் முழுதும் தடிக்காமல் சிற்சில இடங்களில் அதிகமாகவும், மற்ற இடங்களில் குறைவாகவும் தடித்து இருக்கின்றது. உயிரணுச் சுவர்களின் மூலைகள் மட்டும் நன்ருகத் தடித்திருப்பதால் இவை இப் பெயர் பெற்றன. இவை நீண்ட சதுரமுள்ள வடிவமும், ஒருபுறம் சாய்ந்து நீண்ட சதுர வடிவமும் பெற்று, இரு முனேகளும் வர வரக் குறுகி இருப்பதைக் காணலாம். உயிர்த்தாதுவும் (cytoplasm) உட்கருவும் (nucleus) உயிரணு முதிர்ந்த பிறகும் தொடர்ந்து உயிருடன் இருக்கும் இயல்புடையன. உயிரணுக்கள் ஒன்றன்மேல் ஒன்று பலவாறு ஏறிப் படிவதால் நீண்ட தசைநார் போலவுங் காணப் படும். உயிரணுச் சுவர் செல்லுலோஸ் (cellulose) பெக்டின் (pectin), பெக்டின் பொருள்களால் ஆக்கப்பட்டு, அதிகமான நீரையும் பெற்றிருக்கும். குறுக்குவெட்டில் இவ்வுயிரணுக்கள் வட்டமாகவோ, மூலேகளே உடையனவாகவோ இருப்பது தெரியும். (படம் 74-2). சுவர்கள் சாதாரணமான துளேகளைப் (simple pits) பெற்றிருப்பதைப் பக்க நீள்வெட்டில் (T.L.S. - tangential Hongitudinal section) <5ır 600T 6 omrub. 22-u?if:%,5tr.35ı lfi 35 6T@ı`ıl urt 355 தோன்றும். சில சமயங்களில் பசுங்கனிகங்கள் (chloroplasts) கூட இருப்பதுண்டு. இவ்வகையான உயிரணுக்கள் எப்போதும் தனித்த சாமானிய தசையைச் சேர்ந்தவைகளேயன்றிச் சோற்று உயிரணுக்களேப்போலச் சிக்கலான தசையில் கலந்து காணப் படுவதில்லை. வளர்கின்ற பகுதிகளில் இவை இருந்து வளர்ச் சிக்குத் தக்கவாறு வளைந்து கொடுக்கும். இந்த இயல்பு இவற்றின் சுவர்களைப் பொறுத்துள்ளது. சுவர்கள் நீளவும் வளையவும்கூடிய தன்மைவாய்ந்தவை. இவ் வுயிரணுத் தொகுதி தாற்காலிகமானவை என்றும், நிலத்தவை என்றும் இருவகைப்படும். தாற்காலிகமானவை 3\ Ir633rl tú« (secondary) வளர்ச்சியின்போது நசுங்கியும் தட்டை யாயும் அழிந்துவிடும். நிலேயான தொகுதி இலேக் காம்புகளில் இருந்து இலேப்பரப்பைத் தாங்கிக்கொள்ளும் வலு உடையது. «rġ 2-u@ggy91;# ®;br&#, (Sclerenchyma) தாவரங்கள் நிமிர்ந்து நிற்பதற்கும், தாவரப் பகுதிகளேக் காப்ப தற்கும் இவ் வகையான உயிரணுத் தொகுதி பயன்படுகின்றது. உயிரணுக்கள் வலிய சுவர்களேப் பெற்றுள்ளன. சுவர்கள் லிக்னின் (lignin) என்ற பொருளேக்கொண்டு தடிப்பேறுமாயின் நீர்ப் பகுதி