பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 தாவரம்-வாழ்வும் வரலாறும் சுவர்களில் குறைந்துவிடும். முதிர்ந்த இவ்வுயிரணுக்களில் புரோட்டொப்பிளாசம் இருப்பதில்லே. சுவர்கள் எல்லாம் ஒரே மாதிரியாகத் தடித்தும் வன்மையுடையதாகவும் இருக்கும். இவ் வுயிரணுக்கள் வடிவிலும் அளவிலும் பலவாறு காணப்படுகின்றன. பொதுவாக இவை நார்கள் (fibres), கல்லான உயிரணுக்கள் (sclereids) என்று இருவகைப்படும் (படம் 74-8). நார்கள் (Fibres) மிக நீளமானவை; கூரிய முனேகளே யுடையன. அநேகமாக லிக்லின் பொருள் சேர்ந்து சுவர்கள் தடித்து வலிமை யடையும். செல்லுலோஸ் சேர்ந்து தடிக்கும் சுவர்களும் உண்டு. இவற்றின் சுவர்களில் உள்ள துளைகள் மிகச் சிறியவை. முதிர்ந்த உயிரனுக்களில் புரோட்டொப்பிளாசம் இருந்தாலன்றி.இத்துளேகள் பயன்படுவதில்லை. நார் அணுக்களின் உட்குழி (lumen) சிறிய தாகிக்கொண்டே வரும்; பின்னர் உள்ளிடு அற்றுவிடும். வளரும் நார்களில் பல உட்கரு காணப்படுமாயினும், நாளடைவில் புரோட் டொப்பிளாசம் முற்றிலும் வற்றிப்போய் உயிரணுக்கள் இறந்துவிடும். நார்களிலும் இருவகை உண்டு. தாவரங்களின் புறணி (cortex), சுற்றுவட்டம் (pericycle), சல்லடைக் குழாய்த் தொகுதி (phloem) ஆகிய இவற்றில் காணப்படும் நார்களில் சாமானியத் துளேகளே (simple pits) 2-aircroor. Øasion ஒருவகையாகக் கருதலாம். தாருத் தொகுதியில் காணப்படும் நார்களில் விளிம்புத் துளேகள் (bordered pits) இருப்பதால் இவற்றை மற்றெரு வகையென க் கொள்ளலாம். நார்கள் தனித்தும் தொகுதியாகவும் தாவரங்களில் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. 'நீண்ட நார்களில் இரு முனைகளும் பக்கங்களும் ஒரே சமயத்தில் வளர்ந்துகொண் டிருக்கும். பொதுவாக நார்களின் முழு வடிவமும் வளர்ந்த பின்னரே, சுவர்கள் தடித்து வளர்வது வழக்கம். நார்கள் என்று சொல்லும்போது பருத்தியின் பஞ்சு இழைகள், புறணியில் உள்ள சனல், கற்ருழை இலையிலுள்ள நார் முதலிவற்றைக் குறிக்கும். கல்லுயிரணுக்கள் (Sclereids) (படம் 74-4) பொதுவாக இவற்றின் குறுக் களவு நார்களைப்ப்ோலன்றி ճք (ԱԵ படித்தானது எனினும், விதை, கனிச் சுவர்களில் காணப்படும் கல்லுயிரணுக்கள் இந்த இருவகையிலும் அடங்குவதில்லே. வடிவத்திலும், சுவர்களின் தடிப்பிலும், துளேகளின் அமைப்பு எண்ணிக்கைகளிலும், இவற்றைச் சூழ்ந்துள்ள உயிரணுக்களின் தொடர்பிலும் கல்லுயிரணுக்கள் பலவகையாக வேறுபட்டுக் காணப்படும்.