பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தசைகள் 175 சில விதைகளிலும், கனிச்சுவரிலும், வறண்ட நிலத்தாவரங் களின் இலைகளிலும் இருக்கின்ற நீளமான கல்லுயிரணுக்களே மாக்ரேஸ்கிளிரிட்ஸ் (macroclereids) என்றும், இவற்றின் உட்புற முள்ள பீப்பாய் வடிவான எலும்பு உயிரணுக்களே ஆஸ்டியோ கிளிரிட்ஸ் (osteosclereids) என்றும், சில வறண்ட தாவர உறுப்பு களில் உள்ள நட்சத்திர வடிவான கல்லுயிரணுக்களே ஆஸ்டி ரோஸ்கிளிரிட்ஸ் (asterosclereids) என்றும், நீர்வாழ் செடிகளின் இலக்காம்பு, பூக்காம்பு முதலியவற்றில் உயிரணுக்கிடையில் தனித்து இழைபோன்ற நீண்ட கிளேகளேயுடைய கல்லுயி ரனுக்களை டிரைகோஸ்கிளிரிட்ஸ் (trichoscleroids) என்றும், பேரிக்காய் சதைப்பற்றினுள் மணல் போன்று நாக்கில் தென்படு வதும், தேங்காய் ஒட்டில் இணைந்து காணப்படுவதுமான கல் உயிரனுக்களே பிராக்கிஸ்கிளிரிட்ஸ் (brachysclereids) என்றும் கூறுவர். கடைசியாகக் குறிப்பிட்ட கல் உயிரணுக்களின் சுவர் களில் நீளமான சாமானியத் துளைகளும், கிளேத்த துளைகளும் இரண்டு மூன்று ஒன்ருக இணைந்த துளைகளும் இருக்கின்றன. (படம் 74.4) இவற்றின் உட்குழி மிகச் சிறுத்து இருக்கும். புரோட் டொப்பிளாசம் வற்றிக்கொண்டுவரும். இதில் டானின் (tannin), மியூசிலேஜ் (mucillage) முதலிய பொருள்கள் காணப்படுவதுண்டு. பலவேறு வகைப்பட்ட உயிரணுக்கள் ஒன்ருகிய உயிரணுத் தொகுதி மிகவும் சிக்கலான தசைகளாகும். இவை தாருத் தொகுதியும், சல்லடைக் குழாய்த் தொகுதியும் என இருவகைப் படும். இவற்றின் அமைப்பைத் தண்டின் உள்ளமைப்பில் அறியலாம்.