பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டின் உள்ளமைப்பு (Stem Structure) முதலில் இரு விதையிலேத் தாவரத்தின் இளந் தண்டு ஒன்றை (சூரிய காந்தி) குறுக்கே அறுத்து மிக மெல்லியதாகச் சீவி அத் துண்டின் முகப்பைக் காண்போம் (படம் 75). புறத்தில் தண்டைச் சுற்றிலும் புறத்தோல் (epidermis) என்ற ஒர் அடுக்கு உயிரணுக்கள் உள்ளன. அவை பீப்பாய் வடி வானவை. அவற்றின் வெளிச்சுவர் சில தாவரங்களில் நன்கு தடித்தும், பெரும்பாலானவற்றில் சிறிது தடித்தும் இருக்கும். இதற்கு கியூடிகிள் (cuticle) என்று பெயர். இது கியூட்டின் (cutin) என்ற வேதிப் பொருளால் ஆனது. புறத்தோலுக்கு வன்மை கொடுப்பதும், தண்டின் உட்பகுதிகள் அனைத்தையும் காத்துக் கொள்ளுவதும், தாவரத்தின் எல்லாப் பகுதிகளேயும் மூடிக்காப்பது மான இப் புறத்தோல் தாவரத்தின் மேலுறை என்று கூறப்படும். இதில் உள்ள உயிரணுக்கள் சோற்றுயிரணுக்கள் ஆகும். இவை தாவரங்கட்கும் தாவர உறுப்புகட்கும் ஏற்பப் பல மாற்றங்களைப் பெற்றிருக்கின்றன. இவை அனஃபாலிஸ் (anaphalis) முதலிய செடிகளில் மயிரிழைகளைப் பெற்று இருக்கும். இச் செடி மலே உச்சியில் மிக்க தட்பமான இடங்களில் வளர்வதால் புறத்தில் மயிர் அடர்ந்து போர்வைபோல மூடிக்கொண்டு செடியைக் காத்து வருகின்றது. மால்வேசி (malwaceae) குடும்பத் தாவரங்களில் பல உயிரணுக்களேயுடைய நட்சத்திரம் போன்ற மயிரிழைகள் (stellate hairs) புறத்தோலில் காணப்படுகின்றன. பூனே க்காஞ்சுரம் (tragia) முதலிய செடிகளில் இம் மயிர் ஒருவித நஞ்சுடைய நீர்ப் பொருளேப் பெற்றுள்ளபடியால் அவை நமது உடம்பில் பட்டவுடன் அரிக்கும். இதல்ை ஆடு மாடுகள் இச்செடிகளே மேய்ந்து விடாமல் இம் மயிரி ழைகள் காத்துவரும். தூதுவளே (solanum trilobatum) முதலிய கொடிகளிலும், கலியான முருங்கை போன்ற மரங்களிலும், தாமரையின் இலேக் காம்புகளிலும் புறத்தோல் உயிரணுக்கள்