பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டின் உள்ளமைப்பு 177 l O○() o i h ot படம் 75. இருவிதையிலைத் தாவர இளந்தண்டின் உள்ளமைப்பு (குறுக்குவெட்டு) 1. புறத்தோல்மயிர், 2. புறத்தோல், 3. புறணி, 4. உள்தோல், 5. காழ் உயிரணுத் தசை (சுற்று வட்டப் பகுதி), 6. உட்சோறு, 7. சோற்று இரேகை, 8. குழாய் முடி. சிறு முட்களாக மாறி இருக்கின்றன. இம் முட்கள் முறையே கொடி ஏறிப் படர்வதற்கும், மாடுகளும், நீர்வாழ் உயிர்களும் தின்று விடாதிருக்கவும் பயன்படுகின்றன. வேளை (gymaudropsis)முதலிய செடிகளில் இம் மயிர்கள் ஒருவிதப் பசைப் பொருளேச் சுரக்கும். இதில் பல சிறு பூச்சிகள் ஒட்டிக்கொள்கின்றன. இப் பூச்சிகள் இச் செடிக்கு உணவாவதில்லை. எனினும், செடியை இப் பூச்சிகள் அழித்துவிடாமல் இருக்க இம் மயிர்ச் சுரப்பிகள் பயன்படுகின்றன. சில பூக்களில் புறத்தோல் உயிரணுக்கள் நல்ல மனமுள்ள சிறு சுரப்பிகளாகவும் (epidermal glands), தேன் சுரப்பிகளாகவும், நீண்டும், பருத்தும், கிஃபத்தும் மாறியிருக்கின்றன. இவையன்றிப் பச்சைத் தண்டின் புறத்தோல் உயிரணுக்கள், இலேகளிலேயே பெரிதும் காணப்படும் இலேத் துளேகளாகவும் (stomata) மாறி இருப்பதுண்டு. இத் துளேகள் வெளிக்காற்றை உள்ளே அனுப்பவும், உள்ளே இருந்து எஞ்சிய நீரை ஆவியாக வெளிவிடவும் பயன்படு கின்றன. தா-12