பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 தாவரம்-வாழ்வும் வரலாறும் புறணி (Cortex): தண்டில் புறத்தோலுக்கு உள்ளாகப் புறணி என்ற பகுதி காணப்படும். இது பல உயிரணுப்படைகளே உடையது. வெளியில் மூலே தடித்த உயிரணுப்படையும் (collenchyma), நடுவில் சோற்றுயிரணுப்படையும் (parenchyma), 2–1 LL1p;##96b 2-6īr தோலும் (endodermis) காணப்படும். இவற்றுள் மூலே தடித்த உயிரணுப் படை தண்டிற்கு வலிமை கொடுக்கும். இளந்தண்டு களில் உள்ள இப் படையில் பசுங்கணிகங்கள் காணப்படும். இவை இ&லத்தொழிலாகிய உணவாக்குதலே மேற்கொள்வதுண்டு. உயிரணுச் சுவர் மூலேகளில் மட்டும் தடித்து இத் தசையை வலியு டையதாக்கும் பெக்டின் (pectin) என்ற பொருளேயும் செல்லுலோஸ் பொருளேயும் உயிர்த்தாது சிறிதுசிறிதாக உண்டாக்கிவருவதால் சுவரின் மூலேயில் இத் தடிப்பு ஏறுகின்றது. இப் படையில் நான்கு அல்லது ஐந்து அடுக்குகள் உள்ளன. புறணியில் உள்ள சோற்று உயிரணுப் படையில் ஐந்து அல்லது ஆறு அடுக்குகள் காணப்படும். உயிரணுக்கள் வட்டம் அல்லது முட்டை வடிவில் சற்றுப் பெரியதாக இருக்கும். உயிரணுச் சுவர் மிக மெல்லியது; செல்லு லோஸ் (cellulose) பொருளால் ஆயது. உயிரணுக்களுக்கு இடையில் உள்ள சிறுவெளி இப்படையில் நன்கு தெரியும். சில தாவரங்களில் உள்ள சுரப்பிக் குழாய்கள் இப் படையில் காணப் படும். புறணியின் உள் எல்லேயாக அமைந்துள்ள உள்தோல் (endodermis) ஒரே ஒரு வரிசையான உயிரணுக்களே உடையது. இவையும் பீப்பாய் வடிவினவே. இவ் வரிசையிலுள்ள உயிரணுக் கள் இடையீடின்றி நெருக்கமாக அமைந்துள்ளன. இதன் உட்புற உயிரணுச் சுவரும் குறுக்குச் சுவர்களும் சற்றுத் தடித்திருக்கும். உள் தோலுக்குரிய இத் தடிப்புகள் வேரில்தான் நன்ருக அமைந் துள்ளன. மற்ற உள்தோல் உயிரணுக்களில் ஸ்டார்ச்சுப் பொருள் (starch) மிகுந்து காணப்படுவதால் இதை ஸ்டார்ச்சுப் பொருள் படை எனவுங் கூறுவதுண்டு. உள்தோல், தண்டின் உட்பகுதியை நன்கு காத்து நிற்கப் பயன்படுகின்றது. சுற்று வட்டம் (Pericycle) உள்தண்டின் வெளிப்புறத்தில் உள்ள உயிரணுப் படையைச் சுற்றுவட்டம் என்பர். இது தண்டில் தான் நாலேந்து வரிசையாக நன்கு அமைந்துள்ளது. இதில் இரு வகையான தசைகள் உள்ளன. சோற்று உயிர்த்தசையும், சுவர் தடித்த உயிரணுத் தசையும் மாறிமாறி உள்தோலுக்கு உட்புறமாக உள்தண்டைச் சுற்றி அமைந்துள்ளன. இதில் உள்ள உயிரணுச் சுவர்களில் நடு மென் சுவர்(middle lamella) தெளிவாகக் கானப் படும். இப் படையை உள்தண்டின் புறப்படை எனவுங் கூறலாம் (படம் 76).