பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 * () தாவரம்-வாழ்வும் வரலாறும் குழாய் முடி (Vascular bundle): தண்டின் உட்பகுதியில் மிக இன்றியமையாத உறுப்புகள் உள்ளன. இவற்றை நன்கு காப்பாற்று வதற்காகவே தண்டின்புறத்தில் இத் துனைப் படைகள் அமைந்து உள்ளன. தாவரங்கள் வேர்களின்மூலம் உறிஞ்சும் நீர், தாரு(xylem) என்ற குழாய்களின்மூலம் தண்டின் மேல் ஏறுகின்றது. இத் தாவரக் குழாய்கள் மற்றுஞ் சில உயிரணுக்களேயும் பெற்று ஒரு தொகுதியாக இருக்கும். இத்துடன் மற்ருெரு வகையான குழாய் களும் இருக்கின்றன. இவை சல்லடைக் குழாய்கள் (seive tubes) எனப்படும். இலைகள் உண்டாக்கும் உணவுப் பொருள்கள் இச் சல்லடைக் குழாய்களின்மூலம் இலேயிலிருந்து தாவரத்தின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்லும். இச்செயலில் ஈடுபட்டிருக்கும் தசைத் தொகுதி சல்லடைக் குழாய்த் தொகுதி (phloem) என்று கூறப்படும். தண்டின் குறுக்கு வெட்டில் இவ் விரு வகைத் தொகுதிகளும் சேர்ந்து ஒரு முடிச்சுப் போன்று காணப்படும். இதைக் குழாய் முடி என்பர். இன்னும் குழாய் முடியில் தாருத் தொகுதிக்கும் சல்லடைக் குழாய்த் தொகுதிக்கும் இடையில் வளர்படை (cambium) என்ற ஒரு தசையும் உண்டு. குழாய் முடி வளரும்பொழுது தாரு குழாய்த் தொகுதிக்கும் சல்லடைக் குழாய்த் தொகுதிக்கும் வேண்டிய உயிரணுக்கள் இந்த வளர்படையில் பகுப்பு முறைப்படி » ¢¤rl ir£«5rpoor. @3 Ég, αρτα- συorii rool- (fascicular cambium) என்று பெயர். தண்டிலுள்ள குழாய் முடிகள் தாவரங்கட்குத் தக்கவாறு அமைந்துள்ளன. இரு விதையிலேத் தாவரங்களில் குழாய் முடிகள் வட்டமாக அமைந்துள்ளன. ஒவ்வொரு குழாய் முடியும் தாருத் தொகுதியை உட்புறத்திலும், சல்லடைக் குழாய்த் தொகுதியை வெளிப்புறத்திலும்கொண்டு ஒன்றின் பக்கத்தில் ஒன்ருக ஒரே ஆரையில் இருக்கும். இப்படிப்பட்ட குழாய் முடியைப் பக்கத்து அமைந்த (collataral) குழாய் முடி என்பர். இதில் முன்தோன்று தாரு (protoxylem) உட்சோற்றுக்கருகில் இருக்கும். இதனே உள்நோக்குத் (endeuch) தாரு எனலாம். பின் தோன்றும் தாரு (metaxylem) வெளிப்புறமாக வளர்ந்து அமைவ தால் தண்டுகளில் தாரு வளர்ச்சி, மைய நீக்கமானது அல்லது விரி மையமானது (centrifugal) எனப்படும் (படம் 77). குழாய்முடி அமைப்பு: குழாய் முடியின் வெளிப்புறத்தில் நார் o-u?rgplåssir 65 TG:stä (sclerenchymatous hard bast) Guprulu முடிக்குப் பாதுகாவலாக அமைந்திருக்கிறது. அதனே அடுத்துள்ள குழாய்முடிப்புறப் பகுதி சல்லடைக் குழாய்த் தொகுதி என்று கண்டோம். இதில் சல்லடைக் குழாய்களும் (seive tubes), இதைச்