பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டின் உள்ளமைப்பு 183 வளர்படை (Cambium): இது மூன்று அல்லது நான்கு அடுக் கான உயிரணுப் படைகளே உடையது. உயிரணுக்கள் நீள் சதுரமா னவை. உயிரணுச்சுவர் மிக மெல்லியது; செல்லுலோஸ் பொருளால் ஆனது; இவற்றுள் ஒர் உயிரணுப்படைதான் வளர்படையாக இருக்க முடியும். இதில் உயிரணுப் பகுப்பு மிக வேகமாக நிகழும். நீட்டு வாக்கில் பகிரும் இரு உயிரணுக்களில் ஒன்று,வளர்படை உயிரணு வாக இருக்கும். திரும்பவும் இது பகிர்ந்து வளரும் இயல்பை உடையது. மற்றைய உயிரணு, தாருவாகவோ சல்லடைக் குழா யாகவோ மாறும். தாருவின் பக்கமாக, அதாவது, வளர்படை உயிரணுவிற்கு வெளிப்புறத்தில் இருக்குமானல், இவ்வுயிரணு தாருவாகச் சேரும். சல்லடைக் குழாய்த் தசையின் பக்கத்தில் அதாவது, வளர்படை உயிரணுவிற்கு உட்புறத்தில் இவ்வுயிரணு இருக்குமானுல் சல்லடைக் குழாயாகிவிடும். இவ்விருவகைத் தசை கட்கும் வேண்டிய உயிரணுக்களே இப் படை படைத்துக் கொடுத்து வரும். இடையில் உள்ள வளர்படை உயிரணுக்கள் தாவரங்கட்கு ஏற்பப் பெரியதும் சிறியதுமாக உள்ளன. சிலவற்றில் 175 மைக் ரான்கள் நீளமும், 20 மைக்ரான்கள் விட்டத்தின் வெட்டு அகல மும் (tangential width), 7 மைக்ரான்கள் நீள்வெட்டு அகலமும் (radial width) காணப்படும். பைனஸ் (pinus) மரத்தில் இதன் அளவுமுறையே4000x42x12 மைக்ரான்களாக இருப்பதுமுண்டு. இவ்வுயிரணுக்கள் கூரிய முனேகளேயுடையன; உள்ளே பெரிய குமிழ் (vacuole) காணப்படும். உயிர்த்தாது உயிரணுச் சுவரை ஒட்டித் துரிதமாக ஒடும். உட்கரு பெரியது ; சற்று நீண்டு தோன்றும். தாரு உண்டாகும்போது இவ்வுயிரணுக்கள் விட்டப் பகுப்பாகவும் (tangential division),சல்லடைக் குழாய் உண்டாகும் போது குறுக்குப் பகுப்பாகவும் (transwerse division), அல்லது ஒரு L1/pub G-stulff, 2. SBAbsort LS til 1r S6, th (oblique radial division) பகிர்ந்து வளரும். தாரு (Xylem) வளர்படைக்கு உட்புறத்தில் இருக்கும் இத் தாரு சிக்கலான தசைப் பகுதி ஆகும். இதில் டிர கிட் (tracheid) என்ற குரல்வளே போன்ற குழாய்களும், வெசல் (vessel) என்ற குழாய்களும், நார்கள், சோற் றுயிரணுக்கள் ஆகியவற்றுடன் கலந் திருக்கும். தாருவின் மூலம் வேரால் உறிஞ்சப்படும் நீர் இலேகட்கு ஏறிச் செல்லும். செடியிலுள்ள பிற தசைகளைப்போல் அல்லாமல் தாருவில் உள்ள உயிரணுக்கள் உயிரற்றவைகளாக இருக்கும் (படம் 79). பண்டைக் காலத்தில் இருந்த தாவரங்களே நோக்கும்போது குழாய்களைக் காட்டிலும் குரல்வளே போன்ற குழாய்கள் காணப்