பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தண்டின் உள்ளமைப்பு 185 படுவதால் இவை முந்தியவை என்பது புலகிைன்றது. பொதுவாக, குழாய்கள் பூக்குந் தாவரங்களில்தான் காணப்படுகின்றன. குழாய் அணுக்கள் ஒன்ருேடொன்று இணைந்து நீண்ட குழா யாகின்றது. ஒவ்வோர் அணுவின் இரு நுனியிலும் துளேகள் பல உள்ளன. குழாய்மூலமான ஆதிக் குழாய் அணுக்களின் கூரிய நுனியில் துளைகள் இல்லை. ஆனால், அவற்றின் பக்கங்களில் பல துளைகள் இருக்கின்றன. இத் துளைகளின் வழியாகத்தான் இக் குழாய்களில் நீர் உறிஞ்சப்படுகின்றது. இவ்விருவகைத் தாருக் குழாய்களும் பூக்குந் தாவரங்களில் உள்ளன. இவற்றின் உட் சுவரில் இரண்டாம் தடிப்புப் பலவாறு உண்டாகின்றது. முதலில் தோன்றிய குழாய்களில் வட்டவடிவமான தடிப்பும் (rings), சுற்றுக் கம்பிபோன்ற தடிப்பும் (spiral), சற்றுப் பின் தோன்றும் குழாய் களில் ஏணி உருவான தடிப்பும் (scalariform), வலேப்பின்னல் (3Lur6ör po 35tą-LLỊth (retriculate) காணப்படும். லிக்னின் (lignin) என்ற வேதிப் பொருளால் இத்தடிப்பேறுகின்றது. தாருவில் உள்ள நார்கள் (fibres) தடித்த சுவருடையன. விளிம்புத் துளைகள் (bordered pits) நிறைந்திருக்குமாயினும் விளிம்பு மிகக் குறைந்து இருக்கும். சாதாரணத் துளைகள் உள்ள நார்களும் (fibiriform), குழாய் போன்ற நார்களும் தாருக்குழாய் களுடன் கலந்து காணப்படுகின்றன. சில நார்களின் முதிர்ந்த நிலையில் குறுக்குச் சுவர் (septum) உண்டாகும். நார்கள் வடிவிலும் அளவிலும் பலவாறு வேறுபட்டுள்ளன. இவையின்றி, தாருவில் உயிருள்ள சோற்றுயிரணுக்கள் இருக்கின்றன. முன் தோன்று தாருவிலும், பின்தோன்று தாருவிலும் இவை காணப்படுமாயினும், பின்தோன்று தாருவில் மரச்சோற்றுயிரணுக்கள் (wood_parenchyma) @(3rsoas 3 (33 röspusti Giggy1 #3óir (ray-parenchyma என இருவகை உள்ளன. இவை தாருக் குழாய்களே இனத்துக் கொண்டிருக்கும். தண்டின் நடுவிலிருந்து வெளிப்புறமாகத் தாரு வளரும். இதற்கு விரிமையத் தாரு (centrifugal xylem) என்று பெயர். இதில் முன்தோன்று தாரு தண்டின் மையத்தையே நோக்கி யிருக்கும் (endarch). வளர வளரப் பின் தோன்று தாரு புறணியை நோக்கியிருக்கும். இவற்றின் குழாய்கள் முன் தோன்று தாருக் குழாயைக் காட்டிலும் பெரியனவாகவும் அதிகமாகவும் இருக்கும், தாருப் பகுதிக்கு உட்புறமாகத் தண்டின் நடுவில் அகன்ற சோற்றுத் தசை இருக்கிறது. இது சோற்றுயிர் அணுக்களால் ஆனது. இதை உட்சோறு (pith) என்று கூறுவர். இரு விதை யிலேத் தண்டுகளில் உட்சோறு புறப்படையைக் (cortex)