பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 தாவரம்-வாழ்வும் வரலாறும் காட்டிலும் பெரியதாக இருக்கும். இதில் உயிரணு இடைவெளி காணப்படும். சோற்றுயிரணுக்கள் பெரும்பாலும் வட்டவடிவ மாகத் தோன்றும் ; சற்றுத் தளர்ந்து அமைந்திருக்கும் ; உயிரணுச் சுவர் செல்லுலோஸ் பொருளால் ஆனது. சில தண்டுகளில் தடித்த சுவர்களே உடைய சோற்றுயிரணுக்களும், நார் உயிரணுக் களும் இருப்பதுண்டு, இளந்தண்டில் உட்சோற்று உயிரணுக்கள் துரிதமாகத் தொழிற்படும்; சுரப்பிக்குழாய்களும் காணப்படும். தண்டுகள் வளரும்போது முதலில் முதிர்வது உட்சோறு. சில தண்டுகளில் முதிர்ந்த உட்சோற்று உயிரணுக்கள் சிதைந்து துளே உண்டாகும். இத் தண்டில் உள்ள குழாய்முடிகள் வட்டமாக அமைந் துள்ளன. தண்டிற்கு ஏற்ப இவற்றின் எண்ணிக்கை இருக்கும். ஒவ்வொரு குழாய்முடியிலும் தாருவும், சல்லடைக் குழாய்களும் பக்கத்தில் அதாவது, தண்டின் ஒரே ஆரையில் அமைந்திருக் கின்றன. இதைப் பக்க அமைப்பு (collateral) என்பர். சில இரு விதையிலேத் தண்டுகளில் உள்ள குழாய் முடிகளில் (பரங்கிcucurbita maxima) சல்லடைக் குழாய்த் தொகுதி தாருவின் இரு பக்கத்திலுமாக, அதாவது, உள்ளும் புறமுமாக இருக்கும். இது globuá3, sootpril 1760s goprungpo- (bicollateral vascular bundle) என்று கூறப்படும். குழாய் முடிகள் தண்டில் அமைந்துள்ள முறை தண்டிற்கு வலிமை கொடுக்கக்கூடியதாக இருக்கின்றது. பொறியியல் Qpodsp435 (engineering principles) op;#356.16%rgoor th 35toor Lil JG கின்றது. இதனைத் தண்டவாள அமைப்பு முறை (girder principle) என்று கூறுவர். தண்டவாளத்தின் குறுக்குவெட்டில் அடிப் புறத்திலும் மேற்புறத்திலும் தடித்த வலிமையான இரு பட்டை களும், இவை இரண்டையும் இணைத்துக்கொண்டு நடுவில் மெல்லிய உயரமான ஒரு பட்டையும் உள்ளன. இதில் மேற் பட்டையில் வைக்கப்படும் பளு (weight) அடிப் பட்டைக்கு, இடைப் பட்டையின் வழியாகப் பரவும். அடிப் பட்டை மேற் பட்டையைப்போல வலியுடையதாகவும் விரிதலின்றியும் இருப் பதால் தண்டவாளம் வளேயாமல் பளுவைத் தாங்கிக்கொள்ளு கிறது. இதைப்போல இருவிதையிலேத் தண்டுகளில் உள்ள குழாய் முடிகள் பல தண்டவாளங்களின் அமைப்பைப் பெற்று இணேந்துள்ளது. இதல்ை தண்டு வலிமை உடையதாகவும் எளிதில் சிதைந்து போகாமலும் இருக்கின்றது.