பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலைத் தாவரத் தண்டு (Monocot Stem) இதன் உள்ளமைப்பு இருவிதையிலேத் தண்டின் உள்ளமைப் பிற்கு வேறுபட்டிருக்கிறது. இதன் அமைப்பையும் இளம் தண்டின் குறுக்குவெட்டில் காண்போம் (படம் 80). வெளிப் புறத்தில் புறத்தோல் உள்ளது. இது ஒர் உயிர் அணு வரிசை யானது. உயிரணுக்கள் பீப்பாய் வடிவானவை. இதன் உட் புறத்தில் ஒன்று அல்லது இரண்டு வரிசையாக மூலே தடித்த உயிரணுக்கள் காணப்படும். சில தண்டுகளில் சுவர் முற்றிலும் தடித்த காழ் உயிரணுக்கள் இருப்பதும் உண்டு. இருவிதையிலேத் தண்டில் இருப்பதுபோல இதில் புறணி, உள்தோல், சுற்றுவட்டம், உட்சோறு முதலியவை இல்ல்ே. தண்டின் உள்ளே அகன்ற சோற்றுயிரணுக்கள் நிரம்பியுள்ளன. இவற்றில் குழாய் முடிகள் (vascular bundles) பரவலாகச் சிதறி அமைந்துள்ளன. இத் தண்டுகளே மூவகையாகப் பிரிக்கலாம். குழாய்முடிகள் பரவலாகத் தண்டின் உட்பகுதி முழுவதும் அங்கங்கே அமைந்து இருப் L163) 5 5 SGL SOL (saccharun spontaneun) Gut 6örp Lossfs) காணலாம். தண்டின் வெளிப்புறம் சுற்றிலும் குழாய் முடிகள் மிகுதியாகவும் மையத்தில் வரவரக் குறைவாகவும் இருப்பதைச் சோளத் தண்டில் (zea-mays) காணலாம் (படம் 80). தண்டின் மையத்தில் கூடு விழுந்துள்ள மூங்கில், கோதுமை, நெல் முதலிய வற்றின் தண்டுகளில் குழாய் முடிகள் புறத்தில் ஓரளவிற்கு அமைந் துள்ளன. இவ்வகையான இளம் தண்டுகளில் மையத்தில் இருந்த உட்சோறு சிதைந்து கூடு விழுகின்றது. குழாய்முடி ஒவ்வொன்றும் சாற்றுக் குழாய்களைப் பெற்றுள்ளது. இதைச் சுற்றி உள்ள காழ் உயிரணுப் படை (sclerenchyma) சாற்றுக் குழாய்களே நன்கு காப்பாற்றுவதற்குப் பயன்படும். குழாய் முடிகள் எல்லாம் தண்டின் மையத்தை நோக்கியே இருக்கும்.