பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 தாவரம்-வாழ்வும் வரலாறும் லிருந்து உட்செல்லவேண்டிய நீர் உயிரணுச் சுவரில் உள்ள நுண் துளைகளின் வழியாகத்தான் செல்லவேண்டும். இத் துளே களே உயிர்த்தாது அடைத்துக்கொண்டிருக்கிறபடியால் புறணியில் வந்து சேரும் நீர் ஊடுருவல் முறைப்படி (diffusion) உள்ளே புகவேண்டும். அதே சமயத்தில் உட்புறத்திலுள்ள சத்துப் பொருள்கள் வெளியே செல்ல முடியாது. சில தாவரங்களில் உள் தோலில் ஸ்டார்ச்சு (starch) காணப்படும். தாருக் குழாயின் எதிரே உள்ள உள்தோல் உயிரணுமட்டும் வெளியிலுள்ள நீரை உள்ளே அனுமதிப்பதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது. உள் தோலுக்கு உட்புறமாகக் காணப்படும் ஒர் உயிரணுப் படையைச் சுற்றுவட்டம் (pericycle) என்பர். தண்டுகளில் இருப்பதுபோல வேரில் சுற்றுவட்டப் படை பல வரிசைகளைக் கொண்டதன்று. உயிரணுக்கள் முட்டை வடிவானவை (படம் 82). இதற்கும் உள்ளே சாற்றுக்குழாய்த் தசை (vascular tissue) அமைந்துள்ளது. இருவிதையிலேத் தாவர வேர்களில் தாரு இரண்டு முதல் ஐந்து கூறுகளாக இருக்கும். தாருப் பகுதிகளுக்கு இடையிடையே சல்லடைக் குழாய்த் தசை உள்ளது. இவை யிரண்டிற்கும் இடையில் வளர்படை (cambium) காணப்படும். தாருவில் குரல்வளே போன்ற குழாய்களும் (tracheids) சாதாரணக் குழாய்களும் (vessels) உள்ளன. இவற்றைப் பிணைத்துக்கொண்டு தாருவைச் சார்ந்த சோற்று உயிரணுக்கள் (xylem parenchyma) இருக்கின்றன. வேரின் தாரு வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக வளரும். இதைக் குவிமையத் தாரு (centripetal xylem) என்பர். இதில் முன் த்ோன்று தாரு (protoxylem) வேரின் வெளிப்புறத்தை நோக்கி இருக்கும் (exarch), பின் தோன்று தாருவின் குழாய்கள் முன் தோன்று தாருவின் குழாய்களேவிடப் பெரியதாகவும் அகன்றும் மையத்தை நோக்கி வளர்ந்துவரும். வேரிலும் தாரு உயிரற்றுக் காணப்படும். வேர்த்துாவிகள் உறிஞ்சும் நீர் இவற்றின் மூலம் உட்செல்லும். தாருவின் கூறுகள் அனேத்தும் ஒன்ருகி மையத்தில் இருப்பதால் வேரில் உட்சோறு காணப்படுவது அரிது. எனினும், சில தாவர வேர்களில் பின்தோன்று தாருக்கு உள்ளே வேரின் நடுவில் உட்சோறு (pith) இருப்பதுமுண்டு. சல்லடைக் குழாய்த் தொகுதி தாருக் கூறுகளின் (xylem arches) எண்ணிக்கையை ஒத்து இருக்கும். இதில் சல்லடைக் குழாய் களும் சோற்றுயிரணுக்களும் உள்ளன. இதில் உள்ள உயி ரனுக்கள் பல வடிவிலும், பல பக்கங்களேப் பெற்றும் இருக்கும். உயிரணுச் சுவர் மிக மெல்லியது. இவற்றில் உணவுப் பொருள்கள் வேரின் பல பகுதிகட்கும் செல்லும். தாருவிலிருந்து இதனைப்