பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194 தாவரம்-வாழ்வும் வரலாறும் பிரிக்கும் வளர்படை இரண்டு மூன்று வரிசையான நீண்ட உயி ரனுக்களே உடையன. இவை தாருவின் வளர்ச்சிக்கும் சல்ல டைக் குழாய் வளர்ச்சிக்கும் வேண்டப்படும் உயிரணுக்களே அவ் வப்போது பகுப்பு முறையால் பெருக்கிச் சேர்க்கும். வளர்படை இளம் வேரில் தாருவைச் சுற்றிக் கோணலாக இருக்கும். உட் புறத்தில் தாருவும், வெளிப்புறத்தில் சல்லடைக் குழாய்த் தொகுதி களும் இருப்பதால் உட்புறமாகப் படைக்கப்படும் உயிரணுக்கள் தாருவாகவும், வெளிப்புறமாகப் படைக்கப்படும் உயிரணுக்கள் சல்லடைக் குழாய்த் தொகுதியாகவும் அமைகின்றன. வேரில் உள்ள சாற்றுக் குழாய்களின் அமைப்பு ஆரை அமைப்பு முறை (radial arrangement) graorto Li Guh.