பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருவிதையிலைத் தாவர வேர் (Monocot Root) இதன் உள்ளமைப்பையும் மெல்லிய ஒரு குறுக்கு வெட்டின் மூலம் அறியலாம். வெளிப்புறத்தில் தாவர உறையாகிய புறத் தோல் காணப்படும். இது ஒன்று அல்லது இரண்டு வரிசையான உயிரணுக்களால் ஆனது. இதைப் பல ஆசிரியர்கள் பலவாறு பெயரிடுவர். இதைப் புறப்படை (epilema, exodermis) என்று கூறலாம். இவ் வுயிரணுக்களும் பீப்பாய் வடிவானவை ; எனினும் சிறியவை. வேர்த்துவிகள் இவ்வுயிர் அணுக்களினின்றும் தோன்றும். வேர்கள் நிலத்தில் வளர்ந்து ஊடுருவிச் செல்லும் போது வெளிப்படையாகிய புறத்தோல் உயிரணுக்கள் சிதைந்து போகின்றன. அவைகளின் இடத்தை உள் வரிசையிலுள்ள உயிரணுக்கள் நிாப்புகின்றன. அதல்ை இப் படை புறத்தில் அமைந்துவிடும். இதற்கும் உள்ளே மிக அகலமான புறணி (cortex) இருக்கின்றது (படம் 83). புறணியில் சோற்றுயிரணுக்கள் பல வரிசைகளாக அமைந்துள்ளன; இவை முட்டை வடிவானவை. சோற்று உயிரணுக்களின் இடையில் பல இடைவெளிகள் (intercellular spaces) உள்ளன. அன்றி, உயிரணுக்களால் நிரப்பப் பெருத சிறுசிறு இடைவெளிகளும் (lacunae) காணப்படுகின்றன; இவை பெரும்பாலும் நீர்வாழ் தாவரங்களின் தண்டில் உள்ளவை. இவை தரையில் வாழும் ஒருவிதையிலேத் தாவர வேர்களில் இருப் பதைக்கொண்டு, ஒருவேளே இத் தாவரப்பகுதி நீரில் வாழும் இரு விதைத் தாவரங்களினின்றும் தோன்றி, நீரில் வாழ்ந்திருந்து பின்னர் தரைக்கு வந்திருக்கக்கூடும் என்று சில அறிஞர்கள் கருது கின்றனர். இது நிற்க, இப் புறணியில் உணவுப் பொருள்கள் சேமித்து வைக்கப்படுவதுமுண்டு. புறணிக்கு உள்ளே உள் தோல் இருக்கிறது. இது ஒரு வரிசையான உயிரணுக்களே உடையது. இவ்வுயிரணுக்கள் இரு விதையிலேத் தாவர வேரின் உள்தோல்போல இடையீடின்றி