பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 தாவரம்-வாழ்வும் வரலாறும் படம் 83. ஒரு விதையிலேத் தாவர வேரின் உள் ளமைப்பு (குறுக்கு வெட்டுப் பகுதி) 1. வேர்த்து வி, 2. புறத்தோல் (சிாைவது). 3. அடித்தோல், 4. புறணி, 5. உள் தோல், 6. சுற்றுவட்டம், 7. முன் தோன்று தாரு, 8. சல்லடைக் குழாய்த் தொகுதி, 9. உட் சோறு , 10. பின் தோன்று தாரு. நெருக்கமாகப் பொருந்தியுள்ளன. இவற்றின் ஆரைச் சுவர்களும் (radial walls) 2-air ol. L-3365r outph (inner tangential wall தடித்துள்ளன. உயிரணுக்கள் பீப்பாய் வடிவானவை. முன் தோன்று தாருக் குழாய்களுக்கு எதிரில் உள்ள இதன் உயிரணுக்கள் மட்டும் புறணியில் வந்து சேரும் நீரை உள்ளே செலுத்துகின்றன. உள் தோலுக்கு உள்ளே இருப்பது சுற்றுவட்டம் (pericycle), இதுவும் ஒரு வரிசை சிறு உயிரணுக்களால் ஆனது. இதற்கும் உள்ளே தாருக் கூறுகளும் (xylem arcles) சல்லடைக் குழாய்த் தொகுதிகளும் (phloem groups) மாறிமாறி அமைந்துள்ளன.