பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் வளர்ச்சி (Secondary growth) இரு விதையிலேத் தாவரங்கள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு, தண்டிலும் வேரிலும் இரண்டாம் வளர்ச்சி காணப்படுகின்றது. இதன் காரணமாக, தண்டுகள் மிகப் பெரியனவாகப் பருத்து வளர் கின்றன. முதலில் இவ் வளர்ச்சியைத் தண்டில் காண்போம். இதற்கு மூலகாரணம் வளர்படையேயாகும் (cambium). வளர் படை சாதாரணமாக ஒருவிதைத் தாவரங்களில் இல்லாமையால் இவற்றில் இரண்டாம் வளர்ச்சி இல்லை. தாருவிற்கும் சல்லடைக் குழாய்த் தொகுதிக்கும் இடையில் மூன்று அல்லது நான்கு வரிசை யான உயிரணுக்களே உடையது வளர்படை. இவ் வரிசைகளில் வளர்படை என்பது ஒற்றை வரிசையானதேயாகும். வளர்படை யினுல் உண்டாக்கப்பட்டுத் தாருவின் பக்கமாக உள்ள உயிர் அனுக்கள் தாருவாகின்றன. அதேபோலச் சல்லடைக் குழாய்த் தொகுதியின் பக்கமாக உண்டாக்கப்படுவன எல்லாம் சல்லடைக் குழாய்த் தொகுதியைச் சேரும் உயிரணுக்களாகின்றன. வளர் படை உயிரணு பகுப்பு முறையினுல் இரண்டாகின்றது. இவ் விரண்டில் ஒன்று வளர்படையின் இயல்பாகிய பெருக்கும் தன்மையைப் பெற்றிருக்கும். மற்றென்று புதிய உயிரணு ஆகும். இது இருக்கும் இடத்திற்கேற்பத் தாருவாகவோ, சல்லடைக் குமு பாகவோ சேர்ந்துவிடும். குழாய் முடிகளுக்கு இடையிலுள்ள ,ே ! ற்று ாேகை உயிரணுக்கள் (medullary ray cells-மஜ்ஜைக் திரவம்) வளரும் தன்மையைப் பெற்று வளர்படை உயிரணுக்க ளாகின்றன. இப்படி ஒவ்வொரு குழாய் முடியிலும் உள்ள வளர்படை இரு பக்கத்திலும் வளர்ந்து, குழாய்முடி இடை வளர்படையுடன் (inter fascicular cambium) (3*i 53) ®® ®jori l , sol- ouàm luih உண்டாகும். இது புதுப்புது உயிர் அணுக்களேப் படைத்து உள்ளும் புறமும் சேர்த்துக்கொண்டேயிருக்கும். இதனல் வளையத்தின் உட்புறத்தில் இரண்டாம் தாருவும், வெளிப்புறத்தில் இரண்டாம் சல்ல ை குழாய்த் தொகுதியும் உண்டாகின்றன.