பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் வளர்ச்சி 199 இதில் சல்லடைக் குழாய்களும், தோழமை உயிரணுக்களும், இதைச் சார்ந்த சோற்றுயிர் அணுக்களும் காணப்படும். சில தாவரங்களில் மெதுவான நார்களும் (bast fibres) உண்டா கின்றன. இவ்வகை நார்கள் சுற்று வட்டத்தில் தோன்றுவது முண்டு. இம் மெதுவான நார்களே சணலாகவும் (jute) பிற நார்களாகவும் விளேந்து நம் நாட்டு வாணிபத் துறையில் பெரும் பயனளிக்கின்றன. இரண்டாம் சல்லடைக் குழாய்த் தொகுதி இவ்வாறு வளர்ந்து பெருகுவதால் ஆதியிலிருந்த சல்லடைக் குழாய்த் தொகுதி (primary phloem) நசுங்கிப்போய்ச் செயலற்று விடும் (படம் 84, 85). உட்புறமாக வளரும் இரண்டாம் தாருவில் ‘ஏணிபோல் தடிப் பேறிய தாருக் குழாய்களும் (scalariform vessels) குரல்வளைக் குழாய்களும் (tracheids) பல மர நார்களும் (wood fibres) ஆரை அடுக்காகத் தோன்றும். வளர்படை வளையம் வெளிப்புறத்தைக் காட்டிலும் உட்புறத்தில் சற்று அதிகமாகவே உயிரணுக்களே உண்டாக்கி வருவதால் தண்டின் பெரும்பகுதி இரண்டாம் தாரு வாகவே இருக்கும். இதல்ை வளர்படை வளையமும் சல்லடைக் குழாய்த் தொகுதியும் வெளிப்புறமாகத் தள்ளப்பட்டு, தண்டு பருத்து விரியும்; ஆதித் தாரு (primay xylem) ஆதிச் சல்லடைக் குழாய்போல நசுங்குதலின்றி, உட் சோற்றின் வெளியில் இருப்பது நன்கு தெரியும். இவ் விரண்டாம் வளர்ச்சியின் போது தாரு, சல்லடைக் குழாய் தொகுதிகளன்றி அங்குமிங்குமாகப் பல சோற்றுயிரனுக் களும் உண்டாகும். இவை ஆரை அடுக்குகளாக வளர்ந்து தாருவிலிருந்து சல்லடைக் குழாய்த் தொகுதிவரை வளர்படை வளையத்தின் வழியாக ஊடுருவிச் செல்லும். இவற்றை இரண்டாம் G33. Togi (31 of 356ir (secondary medullary rays) araji Li. Qazoo, சல்லடைக் குழாய்த் தொகுதியில் புனல் போன்று அகன்று வளர்ந் திருக்கும். ஆண்டு வளையங்கள் (Annual rings) காலத்தின் தட்பவெப்ப நிலேகட்கேற்பத் தாவரங்களின் வளர்ச்சி காணப்படுகின்றது. வெப்பம் ஆரம்பமாகும் நாட்களில் தாவரங்களுக்கு அதிகமான நீர் தேவைப்படுகின்றது. இந்த நீரை மேற்செலுத்துவதற்குத் தாருக் குழல்கள் அதிகப்பட வேண்டும். இதற்கு வளர்படை மிகுதியான தாருவைப் படைத்துக் கொடுக்கும். இதல்ை தாவரங்கள் துளிர்விட்டுத் தழைத்து