பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 தாவரம்-வாழ்வும் வரலாறும் போலி வளையங்கள் உண்டாகும். அன்றி, ஒராண்டில் உண்டான வைரம் போல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் வைரம்பாய வேண்டிய அவசியமில்லே. காலநிலையைப் பொறுத்து ஆண்டு வ8ளயங்களின் அகலம் கூடியும் குறைந்தும் மாறுபடுவதுமுண்டு. susör so su J (Iph Gud sör so sourcupih (Heart wood and Sapwood) நன்கு முதிர்ந்த் அடி மரத்தின் குறுக்குவெட்டை ஊன்றி நோக்கினல் மர வைரம் இரு கூறுகளாகத் தெரியும். இரண்டாம் வளர்ச்சியின் காரணமாக மரத்தின் நடுவே சற்றுக் கறுத்துள்ள உள் வைரத்தை வன் வைரம் (heart wood) என்றும், இதன் வெளிப்புறத்தில் நிறமற்று வெளுத்துக் காணப்படும் புற வைரப் பகுதியை மென் வைரம் (sapwood) என்றும் கூறுவர். வன் வைர மரப் பகுதியில் குங்கிலியம் (resin), பிசின் (gum), டானின் (tannin), எண்ணெய் (oil) முதலிய பசைப் பொருள்கள் வந்து தங்குவதால் இது சற்றுக் கறுத்துத் தோன்றும். வெளிப்பட்டை (Periderm) இரண்டாம் வளர்ச்சியின் காரணமாக இருவிதையிலேத் தாவரத்தின் தண்டிலும், வேரிலும் வெளிப்பட்டை (periderm) உண்டாகும். முதலில் இதற்குத் தக்கை வளர் படை (cork-cambium or phellogen) தோன்றும். தண்டிலும் வேரிலும் உள்ள சுற்றுவட்டம் (pericycle) தக்கை வளர்படையாக மாறும். இவ் வளர்படை உயிரணுக்கள் பகுப்புமுறைப்படிப் பெருகி உட் L10335i, 3 or or moth Lisp Goof (secondary cortex or phelloderm) என்ற வெளிப்பட்டையின் உட்படை ஆகின்றது. இதன் உயிரணுக்கள் பெரிதும் வட்டவடிவமானவை. வெளிப்புறத்தில் உண்டாகும் உயிரணுக்கள் நீள்சதுரமான தக்கை உயிரணுக் களாக (cork or phellum) மாறுகின்றன. இவை மூன்றும் சேர்ந்தே வெளிப்பட்டை (periderm) எனப்படும் (படம் 86). இவ்வாறு வெளிப்பட்டை உண்டாவதால் தண்டுகளில் காற்று முற்றிலும் உட்செல்ல இயலாதவாறு தக்கை உயிரணுக்கள் (cork cells) நன்கு அடர்ந்திருக்கும். தக்கை உயிரணுக்களின் சுவர் சூபரின் (suberin) என்ற வேதிப் பொருளேக் கொண்டு தடிப்பேறு வதால் உயிரற்றுப்போய் நீர், காற்று முதலியவற்றை உள்ளே அனுமதிப்பதில்லை. தக்கை வளர்படையும், இரண்டாம் புறணியும் இவற்றிற்குட்புறமுள்ள உயிரணுப் படைகளும் சுவாசிப்பதற்கு உயிர்வளி (oxygen) வேண்டுமாதலின் வெளிப்பட்டையில் பல துளைகள் உண்டாகின்றன. இவற்றைப் பட்டைத் துளேகள் (lenticels) 6T 6ör Liữ. வெளிப்பட்டையின் நடுவில் உள்ள தக்கை