பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 தாவரம்-வாழ்வும் வரலாறும் யாகி (corklayer) பட்டையின் தொழிலே மேற்கொள்ளும். பொது வாக இவை மூன்றும் தாவரங்களேப் பாதுகாத்தற்பொருட்டு அமைந்த புறச்சாதனங்களே ஆகும். மரங்களுக்குத் தக்கவாறு பட்டை உரியும். கொப்யா (psidium guajava) மரத்தில் செதில் செதிலாகப் பட்டை உரியும். யூ கலிப்டஸ் (eucalyptus) இனத்து மரமொன்றில் பட்டை நீளமாக உரியும். மத்தியதரைக் கடலோரத்தில் வளரும் குவர்க்கஸ் சூபர் (quercus suber) மரத்தில் பட்டை மிகவும் தடித்திருப்பதால், தக்கை செய்வதற்குப் பயன்படுகின்றது. ஆப்பிரிக்காவிலுள்ள காடுகளிலும், பாலினிசியாவிலும், பல்லாண்டுகட்குமுன் நம் நாட்டிலும் காடுகளில் வாழ்ந்த மக்கள் மரவுரி (bark) ஆடையை அணிந்துகொண்டிருந்தனர். இம் மரவுரி புரொசொனிஷியா (broussonetia papyrifera) lor:#496ör Lull. 6»L–Guu gb (35th. 686 ol 1356ño யூடிவிஸ் (ficus utilis), கொரடாரி (couratari) முதலிய மரங்களி லிருந்தும் மரவுரி எடுப்பதுண்டு. படம் 87. இருவிதையிலைத் தாவர இளம் வேரின் உள்ளமைப்பு (குறுக்கு வெட்டு) 1. வேர்த்து வி, 2. புறத்தோல், 3. புறணி, 4. உள்தோல், 5. சுற்று வட்டம், 6. தாரு, 7. சோற்றுயிரணுப் படை, 8. சல்லடைக் குழாய்த் தொகுதி.