பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் வளர்ச்சி 205 இருவிதையிலைத் தாவர வேர்களில் இரண்டாம் வளர்ச்சி (Secondary Growth in Dicot Roots) இருவிதையிலேத் தாவரத் தண்டுகளில் இருப்பதுபோலவே இவற்றின் வேர்களிலும் இரண்டாம் வளர்ச்சி உண்டாகின்றது. தண்டுகளே விடச் சற்று அதிகமாக முதிர்ந்த வேர்களில், வளர்ந்து நீளும் பகுதிக்குமேல் இத்தகைய வளர்ச்சி தொடங்கும். தாருக் கூறுகளுக்கிடையில், தாருக் குழாய்களுக்கும் சல்லடைக் குழாய்த் தொகுதிக்கும் நடுவே உள்ள இணைப்புத் தசை(conjunctive tissue) வளர்படையாக மாறி, பகுப்பு முறையில் புது உயிரணுக்களே உள்ளும் புறமும் உண்டாக்கும். உட்புறம் தோன்றும் தாரு உயிரணுக்கள், வெளியில் உண்டாகும் சல்லடைக் குழாய் உயிர ணுக்களேவிட மிகுந்து வளர்வதாலும், இரு பக்கங்களிலுமுள்ள சுற்றுவட்ட உயிரணுக்கள் வளர்படையாக மாறுவதாலும், வளர் படம் 88. இருவிதையிலேத் தாவர வேரில் இரண்டாம் வளர்ச்சி கிaலகள் 1. வளர்படை 2. சல்லடைக் குழாய்த் தொகுதி (ஆதி), 3. முன்தோன்று தாரு (ஆதி). 4. சுற்று வட்டம், 5. உள்தோல், 6. புறணி, 7. இரண்டாக் தாரு, 8. புறத்தோல் (த க்கை), 9. தக்கை, 10. தக்கை வளர்படை, 11. இரண்டாம் சல்லடைக் குழாய்த் தொகுதி.