பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*8 தாவரம்-வாழ்வும் வரலாறும் அணுவை 'C' எழுத்தும் குறிப்பிடும். நீர்வளி அணு இரண்டும் உயிர்வளி அணு ஒன்றும் கூடி நீர் மூலக்கூறு (H, O) (water molecule) ஆகும். இவ்வாறே பிறவற்றையும் கண்டுகொள்க. இங்ங்னம் தாவரங்கள் வெளிப்படுத்தும் உயிர்வளி, எல்லா உயிர்ப்பொருள்களும் சுவாசிப்பதற்குப் பயன்படுகின்றது. ஒரு வேளே உயிர்வளி உண்டாகாமல் தடைப்படுமேயான ல் தாவரங்கள் தரும் உயிர்வளியைக்கொண்டு இந் நாளில் இவ்வுலகில் உள்ள எல்லா உயிர்களும் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகள் உயிர் வாழலாம் என்பர். தாவர உயிர்கட்கும் விலங்குயிர்கட்கும் உள்ள வேறுபாடுகள் யாவை ? தாவரங்கள் நிலைபெயரமாட்டா; விலங்குகள் இடம் விட்டு இடம் பெயரும் ஆற்றலுடையன என்று எவரும் விடை கூறுவர். ஆனால், இவ் வேறுபாடு முற்றிலும் உண்மையாகாது. ஏனெனில் யூகிளின, கி ள ா ைம .ே ட ா .ே மா ன ஸ் முதலான தாவரங்கள் விரைவாக ஒடி இடம்பெயரும் இயல்புடையன. வோர்ட்டிசெல்லா (worticella), ஸ்டென்டர் (stentor) முதலான விலங்குயிர்கள் இடம் பெயரமாட்டா. யாதேனும் ஒரு பொருளேப் பற்றி நிலேத்துநின்று வாழும். குளம் குட்டைகளில் இவை யனைத்தும் காணப்படுகின்றன. இருப்பினும், தாவரங்கள் பெரும்பாலும் ஒரிடத்தில் வேர் விட்டு நிலேத்து வளர்ந்து, கிளேத்து இருப்பதால் நிலேத்தினேப் பொருள்தாவரம்-என்றும், விலங்குகள் குறுக்கே பருத்து ஒடியாடிக் கொண்டிருப்பதால் இயங்குதினேப் பொருள்-விலங்கு-என்றும் கூறுவர். தாவர வெளி அமைப்பில் ஒரு ஒழுங்குமுறை யில்லே. விலங்குகளின் அமைப்பில் ஒரு ஒழுங்குமுறை காணப்படும். தாவரங்கள் பெரும்பாலும் பச்சையம் பெற்றுப் பச்சை நிறமாக உள்ளன. சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய நீர், கரிவளி முதலிய எளிய பொருள்களேக் கொண் டு சூரிய சக்தியைப் பயன்படுத்தித் தமக்கு வேண்டிய உணவைத் தாமே ஆக்கிக்கொண்டு வாழும். விலங்குகள் தம் உணவை ஆக்கிக்கொள்ள இயலாமல் தாவரங்கள் ஆக்கிவைத்த உணவை உட்கொண்டு தாவரங்களே அண்டி வாழும். தாவரங்கள் இருந்த இடத்தில் இருந்துகொண்டே சக்தி யைச் சேமித்து ஆக்கத்தொழில் புரிவதால் வளர்ந்துகொண்டே இருக்கும். விலங்குகள் தம் உணவைத் தேடி ஒடி ஆடி உழைத்து