பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையின் உள்ளமைப்பு இலேகள் தண்டுகளில் தோன்றுகின்றன. இவை மூன்று வகையானவை. பொதுவாக எல்லா இலைகளும் இலேக்காம்பின் துணைகொண்டு படுக்கையாக விரிந்துள்ளன. இவற்றில் மேற்புறம் (ventral) அடிப்புறம் (dorsal)என்ற இலேப்பரப்பு நன்கு தோன்றும். பெரும்பாலான இலைகள் மேற்புறத்தைச் சூரிய வெளிச்சம் நன்கு படும்படியாக விரித்து நிற்கின்றன. இதல்ை இவ் விலைகள் அடிப் புற மேற்புற வேறுபாடுள்ளவை (dorsiventral) எனப்படும். இவற்றின் உள்ளமைப்பைக் குறுக்குவெட்டின்மூலம் அறியலாம். இலேயின் குறுக்குவெட்டில் இரு பக்கங்களிலும் இலேப் பரப்பும், நடுவில் இலேயின் நடு நரம்பும் உள்ளன. சுற்றிலும் புறத்தோல் காணப்படும். மேற்புறத் தோல் (upper epidermis) ஒரு வரிசை உயிரணுக்களை உடையது. புறத்தோலின் வெளிப்புறத்தில் மிக மெல்லிய புற மேல்தோல் (cuticle) அமைந்திருக்கும். இது கியூட்டின் (cutin) என்ற வேதிப் பொருளால் ஆக்கப்பட்டிருக்கும். சில இலகளில் காணப்படும் வழவழப்பும், பளபளப்பும், சுர சுரப்பும், இந்த புறமேல்தோலேப் (cuticle) பொறுத்திருக்கும் (படம் 89). புறத்தோல் உயிரணுக்கள் பீப்பாய் வடிவானவை; நெருக்கமாக அமைந்து இலேயின் உட்பாகத்தை நன்கு பாது காக்கும். இதைப் போலவே இலேயின் அடியில் உள்ள அடிப்புறத் தோலும் (lower epidermis) இலேயின் உட்பாகத்தைப் பாதுகாக் கவே அமைந்துள்ளது. எனினும், அடிப்புறத் தோலில் பல இலத் துளைகள் (stomata) காணப்படுகின்றன. இவற்றின் வழியாக இலத் தொழிலுக்கு வேண்டிய கரிவளியும் (carpondioxide) சுவாசித்தற்கு வேண்டிய உயிர்வளியும் (oxygen) உட்செல்ல இயலும். உணவாக்கும் இலேத் தொழில் நிகழுங்கால் எஞ்சிய நீர் ஆவியாக வெளிப்படுவதற்கும் இவ்விலைத் துளைகள் பயன்படு கின்றன (படம் 90).