பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையின் உள்ளமைப்பு 213 இருபுறங்களிலும் உள்ள புறத்தோல் இலேத்துளேகளைப் பெற்றி ருக்கும். மற்றும் இலையின் அடிப்புறம் மேற்புறமென்ற வேறுபா டின்றி இருபுறங்களிலும் புறத்தோலுக்கடியில் வேலிக்கால் உயிர ணுக்கள் (palisade cells) உள்ளன. இவற்றிற்கு இடையிற் கடற் பஞ்சு போன்ற சோற்றுயிரணுக்கள் நிரம்பியுள்ளன. இவ்வகை இலகளின் மேற்புறத்தை, இதன் குழாய் முடியில் உள்ள முன் தோன்று தாருவின் நிலையைக்கொண்டுதான் சொல்ல முடியும். ஒருவிதையிலைத் தாவர இலைகள் (Monocot leaves) சோளம், நெல், கரும்பு, மூங்கில் முதலியவற்றின் இலைகள் இருவிதையிலேத் தாவர இலைகளினின்றும் வேறுபட்டவை. அனேக மாக இவ்விலைகள் தண்டில் நேரடியாக ஒட்டி இருப்பதுபோலத் தோன்றும். இவற்றின் இலேக் காம்பு தண்டுடன் மிகவும் ஒன்றி இருக்கும். வாழை, நெல் முதலியவற்றில் இலேக் காம்பு தண்டுடன் தண்டாகவே தோன்றும். இலேயின் உள்ளமைப்பும் இவற்றில் தனிப்பட்டது. இலேயின் குறுக்கு வெட்டில் புறத்தில் உறை போன்றுள்ள புறத்தோல் (epidermis) மேலும் கீழுமாக இருக்கும். நீள் சதுரமான ஒரு வரிசை உயிரணுக்கள் நெருக்கமாக அமைந் துள்ளன. இலத் துளைகள் மேலும், கீழும் காணப்படும். பெரும் பாலான நீர்வாழ் செடிகளில் மேற்புறத் தோலில்தான் இத் துளேகள் உள்ளன. புறத்தோல் உயிரணுக்களின் புறச் சுவரில் ஒருவிதப் பசைப் பொருள் காணப்படும். இரு விதையிலேத் தாவரங்களில் உள்ளதுபோன்ற வேலிக்கால் உயிரணுக்கள் இவற்றில் நீளமாக இருப்பதில்லே. எனினும், பசுங்கணிகங்களேக்கொண்ட சற்று நீளமான சோற்றுயிரணுக்கள் இருபுறத்திலும் புறத்தோலுக்கடியில் உள்ளன. o இலைத் துளைகளும் இவ்விலேகளில் வேறுபட்டுத் தோன்றும். இலத் துளைகளில் உள்ள காப்பு உயிரணுக்கள் (guard cells) பிறை வடிவாக இல்லாமல் நீண்டும் இருபுறத்திலும் தடித்தும் நடுவில் மெல்லியதாகவும் இருக்கும். இவற்றின் சுவர் அமைப்பும் உள்ள மைப்பும் மூடித் திறத்தலும் இருவிதையிலேத் தாவர இலேத்துளே களேப் போன்றதே (படம் 92.2, 3). வெங்காயத் தாள் என்பது இதன் இலேயாகும். இவ்விலே குச்சி போன்று உள்ளது. குறுக்குவெட்டில் வட்ட வடிவமானது. சுற்றிலும்|புறத்தோல் மூடியிருக்கும் இதில் இலேத் துளேகள் உள்ளன.