பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலையின் உள்ளமைப்பு 215 இதற்கடியில் உள்ள சோற்றுயிரணுப்படையில் பசுங்கணிகங்கள் மிகுதியாக உள்ளன. இவை மைய இலகள் (centric leaves) எனப் படும். நெல், புல் முதலியவற்றின் இலேகளின் மேற்புறம் மேடும் பள்ளமுமாக இருக்கும். இதன் புறத்தோல் உயிரணுக்களுக் கடியில் விசை உயிரணுக்கள் (motor cells) சில இருப்பதால் இவ் விலைகள் வெப்பம் அதிகப்படும்போது நீராவிப்போக்கைத் தடுத்தற் பொருட்டு மேற்புறமாக சுருட்டிக்கொள்ளும். கற்றழை, ஆர்கிட்டு (orchid) முதலியவற்றின் இழைகள் சதைப்பற்ருகத் தடித்து உள்ளன. இவற்றின் நடுவே நீர் தேக்க உயிரணுக்கள் (water storage cells) அமைந்து நீரைச் சேர்த்துவைத்து வேண்டும்போது உதவுகின்றன. இவ்வகையான இலேகளில் எல்லாம் ஒருபோக்கு நரம்புமுறை அமைந்துள்ளபடியால் குறுக்கு வெட்டில் பல நரம்புகள் அறுபடும். ஒவ்வொன்றிலும் குழாய்முடிகள் இலேப் பகுதியைப் பொறுத்துப் பெரிய தாகவுஞ், சிறியதாகவும் காணப்படும். குழாய் முடியைச் சுற்றிக் காழ் உயிரணுப்படையும் உள்ளே இரண்டு மூன்று தாருக் குழாய்களும் சில சல்லடைக் குழாய்களுமே காணப்படுகின்றன. கற்ருழை முதலிய இலேகளில் குழாய் முடிகள் இரு வரிசையாக எதிரெதிரே அமைந்துள்ளன. Lior obsolā Go (Healing of wounds) தாவரங்களில் சிறு காயமேற்பட்டால், காயம் பட்ட உயிரணுக்கள் இறந்து காய்ந்து போக, இதற்கடியில் உள்ள உயிரணுக்களின் வெளிச்சுவர் சில காப்புப் பொருள்களேக்கொண்டு வலுப்பெற்று வடுவாகிவிடும். பெரிய காயமேற்பட்டால் அங்குள்ள் சிதையாத சோற்றுயிர் அணுக்கள் தக்கை வளர்படையாகித் தக்கையனுக்களே வெளிப்புறத்தில் தோற்றுவித்துப் புண்பட்ட பகுதியை மூடிவிடும். பெரு மரங்களில் புண்பட்டவிடத்தில் சிதையாத உயிர் அணுக்கள் தக்கை அணுக்களே உண்டாக்கு வதற்குப் பதிலாக காலஸ் (callus) என்ற சோற்றுயிர் அணுத் தசையை உண்டுபண்ணும் என்பாருமுளர். சில சமயங்களில் புண்பட்டவிடத்திலுள்ள குழாய்களில் சிறு பலூன் போன்ற காற்றுப் பைகள் உண்டாகின்றன. இவை பக்கத்தில் உள்ள சோற்றுயி ரணுக்களால் குழாய்களின் சுவர்களில் உள்ள துளையின்மூலம் செலுத்தப்படும் காற்றுட்கொண்ட சவ்வுப் பைகளேயாகும். இவற்றை டைலோசெஸ் (tyloses) என்பர். இதனுல் சாற்றுக் குழாய்கள் அடைபட்டு நீரும், உணவுப் பொருள்களும் சேதப் படாமல் காக்கப்படும்.