பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£16 தாவரம்-வாழ்வும் வரலாறும் @3so 2–ġßig sb (Leaf Fall) தமிழ் நாட்டில் காலத்தைப் பாகுபாடு செய்த பெரியோர்கள் இலேயுதிர்காலம் என்ற ஒரு காலத்தையும் வரையறை செய்தனர். வம்ப மாரியைக் காரென மதித்துப் பூக்கும் கொன்றையைப் போல இலேயுதிர்காலமன்றி வேறு காலத்தில் சில மரங்கள் இலேயுதிர்த்தலும் உண்டு. பொதுவாக வேர்கள் உரிஞ்சுதற்கு நீர் அற்றுப்போகுங் காலத்தும், இலைகளின்மூலம் நீராவிப் போக்கு மிகுந்துள்ள வெப்பமான காலத்தும் பல மரங்களில் இலே யுதிரும். இலே உதிர்வதற்கு அடிப்படையான காரணம் ஒன்றுண்டு. தண்டுடன் இணேந்துள்ள இலேக் காம்பின் அடியி லுள்ள சோற்றுயிர் அணுக்கள் சில முற்றியவுடன் தக்கை அணுக் களாக மாறுகின்றன. சிலவற்றில் இலேக் காம்பின் அடியில் உள்ள குழாய் முடியைச் சார்ந்த சோற்றுயிர் அணுக்கள் வளர்படை யாகித் தக்கை உயிரணுக்களேப் படைத்தலும் உண்டு. மற்றும் அங்குள்ள சோற்றுயிரணுக்களின் சுவர்கள் சூபரின் பொருளால் தடிப்பேறி நேரடியாகத் தக்கையணுக்களாவதும் உண்டு; இதற்கடியில் தக்கை வளர்படையும் தோன்றும். தக்கையனுக் களையுடைய இதற்குத் தக்கைப் படை (abscission layer) என்று பெயர். இப் படை தோன்றியவுடன் இதன் செல்லுலோஸ் பொருள் பெக்டின் பொருளாக மாறி உயிரணுக்களேப் பிரித்துவிடும். அப் போது இலே சாற்றுக் குழாயில்ை மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கும். இலேயில் கனத்திலுைம், காற்றடிப்பதனுலும், சாற்றுக் குழாய்கள் பசைப் பொருளாலும், மெல்லிய சிறு பலூன்கள் (baloon) குழாய் களின் முகப்பில் உண்டாவதாலும் அடைபட்டுவிடும். மிக விரைவில் இப் பகுதியில் தக்கையணுக்கள் உண்டாகி மூடிக் கொள்ளும். இதனேயே இலேத் தழும்பு என்று சொல்கின்ருேம்.