பக்கம்:தாவரம்-வாழ்வும் வரலாறும்-1.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுரப்பிக் குழாய்கள் தாவரங்களில் பலவகையான பொருள்கள் சுரக்கின்றன. அவற்றுள் முக்கியமானவை மரப்பால் (latex), எண்ணெய் (oil), 15ub fi Gaogo (mucilage), (3rræ àorth (resin), l-roofloor (tannin), நஞ்சு (poison), தேன் (honey), முதலியன. மரப்பால் ரப்பர் மரத்திலும் (hevea), ஆல், கள்ளி, வேம்பு முதலிய மரங்களில் நீண்ட சிக்கலான குழாய்களிலும் சுரக்கின்றது. எண்ணெய்ப் பொருள்கள் பொதுவாக, விதைகளில் சேமித்து வைக்கப்படுகின்றன. எனினும், யூகலிப்டஸ் (eucalyptus) இலேயிலும், நாரத்தை, எலுமிச்சை முதலியவற்றின் இலே காய்களிலும் எண்ணெய் சுரக்கின்றது. நிபெந்தெஸ் (nepenthes), டுரோசிரா (drosera) முதலிய பூச்சி உண்ணுஞ் செடிகளின் இலைகளில் நஞ்சு சுரக்கின்றது. ட்சூ கா (tsuga canadensis) Lulʻl«»l—u?g`jih, &56ño (rhus glabra) gRéhou?g9Ilh, மருத மரத்தின் இனமாகிய டெர்மினேவியா (terminalia chebula) கனியிலும், மை (ink) தயாரிப்பதற்கான டானின் சுரக்கின்றது. தோல் பதனிடுவதற்கு டானின் இன்றியமையாத பொருளாகும். பூக்களில் தேன் சுரக்கின்றது. மக்களுக்குச் சிறந்த உணவுப் பொருள் தேன் என்பர். வேளே முதலிய செடிகளின் புறத்தோலில் காணப்படும் மயிர்களில் ஒருவித பசைப் பொருள் சுரக்கிறது (படம் 93). பொதுவாகப் பெரிய சுரப்பிக் குழாய்கள் தாவரங்களில் இரு வகையாக உண்டாகும். உயிரணுச் சுவர் நடுவே பிளந்து விரிவ தால் குழித்து சுரப்பிக் குழாய்கள் உண்டாகின்றன. விதை மூடாத தாவரங்களில் (பைன் மரம்-pinus) காணப்படும் ரெசின் குழாய்கள் இவ்வாறு உண்டாகின்றன. டர்பென்டைன் (turpentine) வார்னிஷ் (varnish) முதலியவற்றிற்கு ரெசின் வேண்டப் படும். மாமரக் குடும்பத்திலும், புன்னேக் குடும்பத்திலும் ரெசின் குழாய்கள் உள்ளன.